ஐபிஎல் 2020: இந்த 4 பேருகிட்ட எதிரணி வீரர்கள் உஷாரா இருக்கணும்..! ஹைடன் எச்சரிக்கை

First Published Sep 4, 2020, 5:30 PM IST

ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. ஐபிஎல் சூடுபிடிக்க தொடங்கிவிட்ட நிலையில், ரசிகர்கள் ஐபிஎல்லில் தங்களது ஆஸ்தான அணிகள் மற்றும் ஆஸ்தான வீரர்களின் ஆட்டத்தை பார்க்க ஆவலாக உள்ளனர். இந்நிலையில், இந்த ஐபிஎல்லில் எந்த 4 பவுலர்கள் மிரட்ட காத்திருக்கின்றனர் என்று மேத்யூ ஹைடன் ஆருடம் தெரிவித்துள்ளார். 

1. புவனேஷ்வர் குமார் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் மேட்ச் வின்னராக, ஃபாஸ்ட் பவுலர் புவனேஷ்வர் குமார் திகழ்ந்துவருகிறார். இதுவரை 117 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 133 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள புவனேஷ்வர் குமார், இந்த ஐபிஎல்லில் கண்டிப்பாக சிறப்பாக பந்துவீசி பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.
undefined
2. ஜஸ்ப்ரித் பும்ரா - மும்பை இந்தியன்ஸ்2013லிருந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடிவரும் பும்ரா, அந்த அணியின் மேட்ச் வின்னராக திகழ்ந்துவருகிறார். டெத் ஓவர்களில் பும்ராவின் சிறப்பான பவுலிங்கால் மும்பை இந்தியன்ஸ் அணி பல த்ரில் வெற்றிகளை பெற்றுள்ளது. பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 77 போட்டிகளில் ஆடி 82 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெத் ஓவர்களை வீசி ரன்களை கட்டுப்படுத்துவதில் வல்லவரான பும்ரா, வழக்கம்போலவே இந்த சீசனிலும் மும்பை இந்தியன்ஸ் அணியில் அசத்துவார் என ஹைடன் நம்புகிறார்.
undefined
3. ஹர்பஜன் சிங் - சென்னை சூப்பர் கிங்ஸ்ஹர்பஜன் சிங் 2008லிருந்து 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடினார். 2018லிருந்து சிஎஸ்கேவில் ஆடிவரும் ஹர்பஜன் சிங் ஐபிஎல்லில், 160 போட்டிகளில் ஆடி 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஹர்பஜன் சிங் இந்த சீசனில் அசத்துவார் என ஹைடன் நம்பிக்கை தெரிவித்தார். ஆனால், ஹர்பஜன் சிங் தனது சொந்த காரணங்களுக்காக இந்த ஐபிஎல் சீசனிலிருந்து முழுவதுமாக விலகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
undefined
4. ரவீந்திர ஜடேஜா - சென்னை சூப்பர் கிங்ஸ்சிஎஸ்கேவின் செல்லப்பிள்ளைகளில் ஒருவரான ரவீந்திர ஜடேஜாவும் இந்த சீசனில் சுழலில் மிரட்டுவார் என ஹைடன் ஆருடம் தெரிவித்துள்ளார். ஜடேஜா இதுவரை ஐபிஎல்லில் 170 போட்டிகளில் ஆடி 108 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
undefined
click me!