ஐபிஎல்லில் ஒரு போட்டியில் கூட கேப்டன்சி செய்திராத 3 மிகப்பெரிய மேட்ச் வின்னர்கள்..! வியப்பளிக்கும் லிஸ்ட்

First Published Sep 4, 2020, 4:58 PM IST

ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. ஐபிஎல் சூடுபிடிக்க தொடங்கிவிட்ட நிலையில், ரசிகர்கள் ஐபிஎல்லில் தங்களது ஆஸ்தான அணிகள் மற்றும் ஆஸ்தான வீரர்களின் ஆட்டத்தை பார்க்க ஆவலாக உள்ளனர். இந்நிலையில், ஐபிஎல்லில் கோலோச்சிவரும், வெற்றிகரமான வீரர்களில் இதுவரை ஒரு போட்டியில் கூட தங்களது அணியை கேப்டனாக இருந்து வழிநடத்திராத வீரர்கள் யார் யார் என்று பார்ப்போம். 
 

1. கிறிஸ் கெய்ல்ஐபிஎல்லின் வெற்றிகரமான மற்றும் பெரும் கிராக்கி உள்ள வீரர் கிறிஸ் கெய்ல். ஐபிஎல்லில் 125 போட்டிகளில் ஆடி 6 சதங்கள், 175 என்ற அதிகபட்ச ஸ்கோர் மற்றும் 41.13 என்ற சராசரியுடன் 4484 ரன்களை குவித்துள்ள கெய்ல், ஐபிஎல்லில் ஆதிக்கம் செலுத்தும் வீரர். ஆர்சிபி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஆடியுள்ள கெய்ல், இதுவரை ஒரு ஐபிஎல் போட்டியில் கூட கேப்டன்சி செய்ததில்லை.
undefined
2. ஏபி டிவில்லியர்ஸ்இந்த பட்டியலில் அடுத்து இருப்பது டிவில்லியர்ஸ். ஆர்சிபி அணியின் மேட்ச் வின்னரான டிவில்லியர்ஸ், தனி நபராக எத்தனையோ போட்டிகளில் ஆர்சிபி அணியை வெற்றி பெற செய்துள்ளார். ஆர்சிபி அணியின் மேட்ச் வின்னரான டிவில்லியர்ஸ், 154 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 133 என்ற அதிகபட்ச ஸ்கோர் மற்றும் 3 சதங்களுடன் 4395 ரன்களை விளாசியுள்ளார். விராட் கோலி ஆர்சிபி அணியின் கேப்டனாக இருப்பதால், டிவில்லியர்ஸுக்கு ஒரு போட்டியில் கூட கேப்டன்சி செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
undefined
3. லசித் மலிங்காமும்பை இந்தியன்ஸின் மேட்ச் வின்னர், ஃபாஸ்ட் பவுலர் மலிங்காவும் ஒரு ஐபிஎல் போட்டியில் கூட கேப்டன்சி செய்ததில்லை. மும்பை இந்தியன்ஸ், ஐபிஎல் இறுதி போட்டிகளில் த்ரில் வெற்றி பெற்றுத்தான் கோப்பைகளை வென்றுள்ளது. இதுவரை 4 முறை மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் கோப்பையை வென்றதற்கு மலிங்கா முக்கிய காரணம். ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுகள்(166) வீழ்த்திய பவுலர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான மலிங்கா, ஒரு ஐபிஎல் போட்டியில் கூட கேப்டன்சி செய்ததில்லை.
undefined
click me!