இதுதான் நீங்க கேப்டன்சி பண்ற லெட்சணமா? தோனி தப்பு பண்ணா மட்டும் மக்கள் ஏன் கண்டுக்குறதே இல்ல? கம்பீர் கடுப்பு

First Published Sep 23, 2020, 4:17 PM IST

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனியின் செயலை கவுதம் கம்பீர் கடுமையாக சாடியுள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், ஷார்ஜாவில் நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே தோற்றது.
undefined
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சஞ்சு சாம்சனின் காட்டடி அரைசதம்(32 பந்தில் 74 ரன்கள்), ஸ்மித்தின் பொறுப்பான அரைசதம் மற்றும் ஆர்ச்சரின் கடைசி ஓவர் ருத்ரதாண்டவத்தால் 20 ஓவரில் 216 ரன்களை குவித்தது.
undefined
217 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்ட களமிறங்கிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ஷேன் வாட்சன் அதிரடியாக ஆடி 21 பந்தில் 33 ரன்கள் அடித்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான முரளி விஜய் 21 பந்துகள் பேட்டிங் ஆடி வெறும் 21 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் சாம் கரன், ருதுராஜ் கெய்க்வாட், கேதர் ஜாதவ் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற, சிஎஸ்கே மீதான அழுத்தம் அதிகரித்தது.
undefined
இலக்கு கடினமானது என்பதால், நல்ல தொடக்கம் அமையாததால் டுப்ளெசிஸும் தோனியும் கடைசி வரை போராடியும் இலக்கை எட்டமுடியவில்லை. டுப்ளெசிஸ் கடுமையாக போராடி அரைசதம் அடித்தார். ஆனால் 19 வது ஓவரில் ஆட்டமிழந்தார். அதனால் 20 ஓவரில் 200 ரன்கள் அடித்த சிஎஸ்கே, 16 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
undefined
சாம் கரன், ருதுராஜ் கெய்க்வாட், கேதர் ஜாதவ் ஆகியோரை இறக்கிவிட்ட பின்னர், 7ம் வரிசையில் தான் தோனி களத்திற்கு வந்தார். ஒருவேளை தோனி கொஞ்சம் முன்வரிசையில் இறங்கியிருந்தால் டுப்ளெசிஸுடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்திருப்பார்; அவரும் களத்தில் செட்டில் ஆகியிருப்பார் என்பதால், டெத் ஓவரில் பெரிய ஷாட்டுகளை அடித்து சிஎஸ்கே வெற்றி பெற்றிருக்கக்கூடும். மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியிலும் தோனி பின்வரிசையிலேயே இறங்கினார்.
undefined
தோனி 7ம் வரிசையில் இறங்கியது விளக்கமளித்திருந்தாலும், அதையெல்லாம் ஏற்றுக்கொள்ளாத கம்பீர், தோனியை கடுமையாக விளாசியுள்ளார்.
undefined
தோனி 7ம் வரிசையில் இறங்கியது குறித்து கருத்து தெரிவித்துள்ள கவுதம் கம்பீர், தோனி 7ம் வரிசையில் இறங்கியது உண்மையாகவே எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. சாம் கரன், கெய்க்வாட்டையெல்லாம் முன்வரிசையில் இறக்கிவிட்டு, அவர் பின்னால் இறங்கியதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒரு கேப்டனாக அவர் தான் முன்னின்று வழிநடத்தியிருக்க வேண்டும். 217 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டும்போது, டுப்ளெசிஸ் தனி ஒருவனாக போராடி கொண்டிருக்கிறார்; போட்டியே முடிந்தபிறகு தோனி 7ம் வரிசையில் இறங்கி என்ன பயன்?
undefined
தோனி கடைசி ஓவரில் 3 சிக்ஸர்களை அடித்ததை பற்றி பேசுவார்கள். ஆனால் அந்த சிக்ஸர்களால் தோனிக்கு தனிப்பட்ட முறையில் அவரது ரன்களுக்கு பயன்படுமே தவிர, அணிக்கு எந்த பயனும் இல்லை. இதே வேறு ஏதாவது கேப்டனோ, வீரரோ இப்படி செய்திருந்தால் அதைப்பற்றி கடுமையாக விவாதிப்பார்கள். ஆனால் மக்கள் ஏன் தோனி தவறு செய்தால் மட்டும் பேசுவதேயில்லை. சுரேஷ் ரெய்னா இல்லாத நிலையில், கெய்க்வாட், சாம் கரன், கேதர் ஜாதவ், முரளி விஜய் ஆகியோரை எல்லாம் உங்களை விட சிறந்த பேட்ஸ்மேன்கள் என்று மக்களிடம் காட்ட முயற்சிக்கிறீர்கள் என்று தோனியை கடுமையாக சாடியுள்ளார் கம்பீர்.
undefined
click me!