ஐபிஎல் 2020: பல வருஷமா பார்த்து பார்த்து கட்டுன கொல்கத்தா கோட்டையை தகர்த்துட்டீங்களேடா..! கம்பீர் வேதனை

First Published Oct 16, 2020, 5:19 PM IST

தினேஷ் கார்த்திக் கேகேஆர் அணியிலிருந்து விலகிய நிலையில், அந்த அணியின் முன்னாள் கேப்டன் கவுதம் கம்பீரின் டுவீட், சலசலப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 

ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகளில் ஒன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ். கவுதம் கம்பீரின் கேப்டன்சியில் 2012 மற்றும் 2014 ஆகிய 2 சீசன்களிலும் கோப்பையை வென்றது. மும்பை இந்தியன்ஸ்(4), சிஎஸ்கே(3) ஆகிய அணிகளுக்கு அடுத்து அதிக முறை ஐபிஎல் டைட்டிலை வென்ற வெற்றிகரமான அணி கேகேஆர்.
undefined
கேகேஆர் அணியை ஐபிஎல்லின் அசைக்க முடியாத கோட்டையாக மாபெரும் சக்தியாக வளர்த்து வைத்திருந்தார் கவுதம் கம்பீர்.
undefined
இன்றைக்கு கேகேஆர் அணியின் நட்சத்திர வீரர்களாக ஜொலிக்கும், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், குல்தீப் யாதவ் ஆகிய வீரர்களை கொண்ட கோர் டீமை கட்டமைத்தவர் கம்பீர். 2017ம் ஆண்டு வரை கேகேஆர் அணியை வழிநடத்திய கம்பீர், 2018 சீசனில் டெல்லி கேபிடள்ஸ் அணியில் இணைந்து, பின்னர் அதே சீசனின் இடையே ஐபிஎல்லில் இருந்து விலகினார்.
undefined
கம்பீர் 2017 உடன் விலகியதையடுத்து, 2018ல் கேகேஆர் அணியின் கேப்டன்சி பொறுப்பை ஏற்ற தினேஷ் கார்த்திக்கின் தலைமையில் கேகேஆர் அணி, 2018ல் பிளே ஆஃபிற்கு முன்னேறியது; 2019ல் ஆறாவது இடத்தை பிடித்து பிளே ஆஃபிற்கு முன்னேறவில்லை.
undefined
தினேஷ் கார்த்திக்கின் கேப்டன்சி கடந்த சீசனிலேயே விமர்சனத்துக்குள்ளான நிலையில், இந்த சீசனில் இங்கிலாந்தின் உலக கோப்பை வின்னிங் கேப்டனும், சமகால கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன்களில் ஒருவருமான இயன் மோர்கனை கேகேஆர் அணி எடுத்ததுமே, அவர் தான் இந்த சீசனில் கேப்டன்சி செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. பரவலாக இதே கருத்துத்தான் இருந்தது.
undefined
ஆனால் இந்த சீசனில் முதல் 7 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் நான்காமிடத்தில் நல்ல நிலையில் தான் உள்ளது. இன்று கேகேஆர் அணி மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்ளவுள்ள நிலையில், இன்று திடீரென கேப்டன்சியிலிருந்து விலகிய தினேஷ் கார்த்திக், இயன் மோர்கனை கேப்டனாக நியமிக்கும்படி கேகேஆர் அணி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தார்.
undefined
தான் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தும் விதமாக கேப்டன்சியிலிருந்து விலகுவதாகவும், கேப்டன்சி பொறுப்பை இயன் மோர்கனிடம் வழங்குமாறும் தினேஷ் கார்த்திக் தெரிவித்திருந்தார்.
undefined
இந்நிலையில், இதுகுறித்து டுவீட் செய்த கேகேஆர் அணியின் முன்னாள் கேப்டன் கவுதம் கம்பீர், ஒரு பாரம்பரியத்தையும் மரபையும் உருவாக்க பல ஆண்டுகள் ஆகும். ஆனால் அதை சிதைக்க ஒரு நிமிடம் போதும் என்று தனது அதிருப்தியையும் விரக்தியையும் வெளிப்படுத்தியுள்ளார்.
undefined
click me!