ஐபிஎல் 2020: எங்க பசங்களுக்கு நான் டிரிங்ஸ் எடுத்துட்டு போறேன்; அது என் கடமை..! சல்யூட் இம்ரான் தாஹிர்

First Published Oct 16, 2020, 2:56 PM IST

சிஎஸ்கே அணியின் மேட்ச் வின்னராக இருந்தும் கூட, இந்த சீசனில் வீரர்களுக்கு தண்ணீர் எடுத்துச்செல்வது குறித்த விவாதம் எழ, அது என் கடமை என பெருந்தன்மையுடனும் தன்னடக்கத்துடனும் தெரிவித்துள்ளார் இம்ரான் தாஹிர்.
 

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசன் பாதி கட்டத்தை கடந்துவிட்டது. முதல் 7 போட்டிகளில் வெறும் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றிருந்த சிஎஸ்கே, 2ம் பாதியில் சன்ரைசர்ஸை வீழ்த்தி வெற்றிகரமாக கம்பேக் கொடுத்துள்ளது.
undefined
கடந்த காலங்களில் சிஎஸ்கேவின் மேட்ச் வின்னர்களாக திகழ்ந்த ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் இந்த சீசனில் ஆடாத நிலையில், மற்றொரு மேட்ச் வின்னரான ரிஸ்ட் ஸ்பின்னர் இம்ரான் தாஹிருக்கு ஆடும் லெவனில் இந்த சீசனில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
undefined
கடந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை(26) வீழ்த்திய பவுலர் இம்ரான் தாஹிர். தனது சிறப்பான பவுலிங்கின் மூலம் பல இக்கட்டான தருணங்களில் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி, சிஎஸ்கேவின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர்.
undefined
இந்த சீசனில் வாட்சன், டுப்ளெசிஸ், சாம் கரன், பிராவோ ஆகிய 4 வெளிநாட்டு வீரர்களுடன் ஆடுவதாலும், இந்திய ரிஸ்ட் ஸ்பின்னர்கள் பியூஷ் சாவ்லா மற்றும் கரன் ஷர்மா ஆகியோர் ஆடுவதாலும், அணி காம்பினேஷனை கருத்தில் கொண்டும் இம்ரான் தாஹிருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
undefined
அதனால் அணி வீரர்களுக்கு போட்டியின் இடையே டிரிங்ஸ் எடுத்துச்சென்றார் இம்ரான் தாஹிர். சீனியர் வீரர்கள் டிரிங்ஸ் எடுத்துச்செல்வது என்றாலே ஏதோ பெரிய அவமரியாதை போல சித்தரிக்கும் போக்கு அதிகரித்துள்ளது.
undefined
அண்மையில், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சர்ஃபராஸ் அகமது டிரிங்ஸ் எடுத்துச்சென்றபோது, முன்னாள் கேப்டனை டிரிங்ஸ் எடுத்துச்செல்ல அனுப்புவதா என்றனர். ஆனால் விளையாட்டில் இதெல்லாம் சகஜம் தான்.
undefined
அந்தவகையில், இம்ரான் தாஹிர் டிரிங்ஸ் எடுத்துச்சென்றதை கண்ட ரசிகர்கள், அவரை ஆடும் லெவனில் சேர்க்க வேண்டும் என்றும் அவர் டிரிங்ஸ் எடுத்துச்சென்றதற்கு எதிராகவும் கருத்து தெரிவித்தனர்.
undefined
இந்நிலையில், அதுகுறித்து டுவீட் செய்துள்ள இம்ரான் தாஹிர், நான் ஆடும்போது எத்தனையோ வீரர்கள் டிரிங்ஸ் எடுத்து வந்துள்ளனர். எனவே எனது சக வீரர்களுக்கு டிரிங்ஸ் எடுத்து செல்வது என் கடமை. நான் ஆடுகிறேனா இல்லையா என்பது முக்கியமல்ல; அணி ஜெயிப்பதே முக்கியம். எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போது, எனது முழு பங்களிப்பை அணிக்கு வழங்குவேன் என்று இம்ரான் தாஹிர் தெரிவித்துள்ளார்.
undefined
click me!