RCB vs KXIP: பஞ்சாப்புக்கு எதிராக ஏபிடி பதுங்கல்.. தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்ட ஆர்சிபி

First Published Oct 15, 2020, 9:24 PM IST

கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் 20 ஓவரில்  171 ரன்கள் அடித்த ஆர்சிபி அணி, 172 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது.
 

நடப்பு ஐபிஎல் சீசனில், 7 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் ஆர்சிபியை எதிர்கொண்ட நிலையில், இந்த போட்டியில் கிறிஸ் கெய்லுடன் களமிறங்கியது.
undefined
ஷார்ஜாவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார்.
undefined
ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்கள் தேவ்தத் படிக்கல் மற்றும் ஃபின்ச் முறையே 18 மற்றும் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் முருகன் அஷ்வின் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகிய 2 ரிஸ்ட் ஸ்பின்னர்கள் இருந்ததால், டிவில்லியர்ஸ் ரிஸ்ட் ஸ்பின்னர்களின் கூக்ளியில் ஆட தடுமாறி, அதிகமுறை அவுட்டாகியிருக்கிறார் என்பதால், அவரை பதுக்கிவைத்துவிட்டு, 4ம் வரிசையில் வாஷிங்டன் சுந்தரும், ஐந்தாம் வரிசையில் ஷிவம் துபேவும் களமிறக்கப்பட்டனர்.
undefined
சுந்தர் 14 பந்தில் 13 ரன்களும், துபே 19 பந்தில் 23 ரன்களும் அடித்து, மிடில் ஓவர்களில் ஓரளவிற்கு நல்ல ஸ்கோரை ஆர்சிபி அடிக்கமுடியாத வகையில், முமெண்ட்டத்தை கெடுத்து ஆட்டமிழக்க, 17வது ஓவரில் நேரடியாக களத்திற்கு வந்த டிவில்லியர்ஸுக்கு செட்டில் ஆக கொஞ்சம் கூட நேரம் இல்லாததால், முதல் பந்திலிருந்தே அடித்து ஆட வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், ஷமியின் பந்தை அடித்து ஆடமுயன்று, வெறும் 2 ரன்னில் 18வது ஓவரில் ஆட்டமிழந்தார்.
undefined
டிவில்லியர்ஸ் ஆட்டமிழந்ததால், தனது தோள் மீது சுமை இறங்கியதாலும், ஸ்கோர் குறைவாக இருந்ததாலும், அடித்து ஆட வேண்டிய நெருக்கடியில் அடித்து ஆட முயன்று, ஷமியின் அதே ஓவரில் 48 ரன்களுக்கு கோலியும் ஆட்டமிழந்தார்.
undefined
கடைசி ஓவரில் கிறிஸ் மோரிஸ் 3 சிக்ஸர்களை விளாசியதால், ஆர்சிபி அணி 20 ஓவரில் 171 ரன்கள் அடித்தது. ரிஸ்ட் ஸ்பின்னருக்கு எதிராக டிவில்லியர்ஸை இறக்கவேண்டாம் என்று அவரை பதுக்கிவைத்து, தங்களுக்கு தாங்களே நெருக்கடியை அதிகரித்துக்கொண்டு, சிக்கலில் சிக்கியது ஆர்சிபி அணி.
undefined
சிறிய மைதானமான ஷார்ஜாவில் 172 ரன்கள் என்பது எளிய இலக்கு. அதிலும், பஞ்சாப் அணி கெய்ல், ராகுல், மயன்க் அகர்வால், மேக்ஸ்வெல், பூரான் என மிரட்டலான பேட்டிங் ஆர்டரை பெற்றிருப்பதால், பஞ்சாப்பிற்கு வெற்றி பெற இது அருமையான வாய்ப்பு.
undefined
click me!