MI vs KKR: நீ பெரிய தலைவலியா இருக்கப்பா தம்பி.. வெளிநாட்டு வீரரை தூக்கிப்போட்ட கேகேஆர்.. மேட்ச் வின்னரும் ஆடல

First Published Oct 16, 2020, 3:57 PM IST

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் உத்தேச கேகேஆர் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸும் கேகேஆரும் மோதுகின்றன. இரு அணிகளும் இந்த சீசனில் மோதிய முந்தைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
undefined
இந்நிலையில், அபுதாபியில் இரு அணிகளும் இன்று மீண்டும் மோதுகின்றன. இதற்கிடையே, தினேஷ் கார்த்திக் கேகேஆர் அணியின் கேப்டன்சி பொறுப்பிலிருந்து விலகியதால், மோர்கன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே இன்றைய போட்டியில் மோர்கன் தலைமையில் கேகேஆர் அணி களம் காணவுள்ளது.
undefined
சுனில் நரைன் காயம் காரணமாக ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் ஆடாத நிலையில், இன்றைய போட்டியிலும் ஆட வாய்ப்பில்லை. அவருக்கு பதிலாக கடந்த போட்டியில் டாம் பாண்ட்டன் ஆடினார். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் டாம் பாண்ட்டன் அணியில் எடுக்கப்பட்டதால், கடந்த போட்டியில், அவர் தொடக்க வீரராக இறக்கப்பட்டார்.
undefined
அவரை தொடக்க வீரராக இறக்குவதற்காக, ஏற்கனவே ஓபனிங்கில் சிறப்பாக செயல்பட்ட திரிபாதி பின்வரிசையில் இறக்கப்பட்டார். ஆனால் பேட்டிங் ஆர்டரை மாற்றியது கேகேஆருக்கு தோல்விக்கு வழிவகுத்தது. ஷுப்மன் கில் மற்றும் ராகுல் திரிபாதி அதற்கு முந்தைய போட்டியில் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.
undefined
நல்ல ஜோடியில் கைவைத்தது, தோல்விக்கு வழிவகுத்ததாலும், அதேவேளையில் டாம் பாண்ட்டனை அணியில் வைத்திருந்தால், அவரை பின்வரிசையிலும் இறக்க முடியாது என்பதாலும், கேகேஆருக்கு தலைவலியாகத்தான் டாம் பாண்ட்டன் இருப்பார். எனவே இன்றைய போட்டியில் அவருக்கு பதிலாக ஃபாஸ்ட் பவுலர் லாக்கி ஃபெர்குசன் ஆட வாய்ப்புள்ளது.
undefined
எனவே வருண் சக்கரவர்த்தி ஒருவர் மட்டுமே ஸ்பின்னராக இருப்பார் என்பதாலும், கூடுதலாக ஒரு ஃபாஸ்ட் பவுலராக ஃபெர்குசன் இணைவார் என்பதாலும், மற்றொரு ஸ்பின்னராக குல்தீப் யாதவ் களமிறங்க வாய்ப்புள்ளது.
undefined
கேகேஆர் அணியின் உத்தேச ஆடும் லெவன்:ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, மோர்கன்(கேப்டன்), தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், பாட் கம்மின்ஸ், கமலேஷ் நாகர்கோட்டி, வருண் சக்கரவர்த்தி, லாக்கி ஃபெர்குசன், குல்தீப் யாதவ்.
undefined
click me!