ஐபிஎல் 2020: கேகேஆர் அணியின் பேட்டிங் ஆர்டர் இப்படித்தான் இருக்கணும்..! முன்னாள் கேப்டன் கம்பீர் அறிவுரை

First Published Oct 5, 2020, 4:35 PM IST

கேகேஆர் அணியின் பேட்டிங் ஆர்டர் எப்படி இருக்க வேண்டும் என்று அந்த அணிக்கு 2 முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் கவுதம் கம்பீர் ஆலோசனை கூறியுள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், கேகேஆர் அணி இதுவரை ஆடிய 4 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் நான்காமிடத்தில் உள்ளது.
undefined
கேகேஆர் அணி ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகளில் ஒன்று. கம்பீரின் தலைமையில் 2012 மற்றும் 2014 ஆகிய 2 சீசன்களில் கோப்பையை வென்றது. 2017ம் ஆண்டு ஐபிஎல் சீசனுடன் கம்பீர் கேகேஆர் அணியிலிருந்து விலகியதையடுத்து 2018லிருந்து தினேஷ் கார்த்திக் அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
undefined
தினேஷ் கார்த்திக்கின் கேப்டன்சியில் 2018ல் பிளே ஆஃபிற்கு சென்ற கேகேஆர், கடந்த சீசனில் பிளே ஆஃபிற்கு முன்னேறவில்லை. இந்த சீசனிலும் அவரது கேப்டன்சி கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
undefined
ரோஹித் சர்மா, தோனி, கோலியை போல தினேஷ் கார்த்திக் அணியை முன்னின்று வழிநடத்துவதில்லை. இதுவரை இந்த சீசனில் கேகேஆர் ஆடிய 4 போட்டிகளிலுமே பேட்டிங் ஆடி வெறும் 37 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார் தினேஷ் கார்த்திக்.
undefined
அணியை முன்னின்று வழிநடத்துபவரே கேப்டனாக இருக்க வேண்டும் என்ற குரல்களும், அதுமட்டுமல்லாது, உலக கோப்பை வின்னிங் கேப்டன் இயன் மோர்கன் அணியிலிருக்கும்போது, அவரைத்தான் கேப்டனாக்க வேண்டும் என்ற குரல்களும் தொடர்ந்து ஒலித்துவருகின்றன.
undefined
கேகேஆர் அணியில் கில், ராணா, மோர்கன், ரசல் என மிரட்டலான பேட்ஸ்மேன்கள் இருந்தும் கூட, சிறிய மைதானமான ஷார்ஜாவில் 229 ரன்கள் என்ற இலக்கை கேகேஆரால் விரட்டமுடியவில்லை. 229 ரன்கள் என்பது கடினமான இலக்குதான் என்றாலும், கேகேஆரின் பேட்டிங் ஆர்டருக்கு அது ஒரு விஷயமே இல்லை.
undefined
அந்த போட்டியில் ஆறாம் வரிசையில் களத்திற்கு வந்த மோர்கன், வெறும் 18 பந்தில் 44 ரன்கள் அடித்து வெற்றிக்கு அருகில் அழைத்துச்சென்றார். ஆனால் கேப்டன் தினேஷ் கார்த்திக்கோ 8 பந்தில் வெறும் ஆறு ரன்கள் மட்டுமே அடித்தார். அந்த 8 பந்துகள் கூடுதலாக மோர்கனுக்கு கிடைத்திருந்தால் போட்டியின் முடிவே மாறியிருக்கக்கூடும்.
undefined
கேகேஆரின் பேட்டிங் ஆர்டர் தவறாக இருப்பதே அந்த அணியின் தோல்விக்கு காரணம் என கருதுகிறார், அந்த அணியின் முன்னாள் கேப்டன் கம்பீர்.
undefined
எனவே இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கம்பீர், ராகுல் திரிபாதியை தொடக்க வீரராக இறக்க வேண்டும். சுனில் நரைனேயே இன்னும் பிடித்து தொங்கக்கூடாது. சுனில் நரைனை 8 அல்லது 9ம் வரிசையில் இறக்க வேண்டும். 4ம் வரிசையில் மோர்கனையும் 5ம் வரிசையில் ஆண்ட்ரே ரசலையும் இறக்கிவிட்டு, 6ம் வரிசையில் தான் தினேஷ் கார்த்திக் இறங்க வேண்டும். மோர்கன் மற்றும் ரசலுக்கு முன் தினேஷ் கார்த்திக் இறங்கவே கூடாது என்று கம்பீர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
undefined
click me!