ஐபிஎல் 2020: அட பாவமே.. முக்கியமான போட்டியிலா டெல்லி கேபிடள்ஸுக்கு இந்த நிலைமை வரணும்..!

First Published Oct 5, 2020, 3:19 PM IST

ஆர்சிபி அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் டெல்லி கேபிடள்ஸின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசனில் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கிய 3 அணிகளில்(ஆர்சிபி, டெல்லி கேபிடல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப்) ஆர்சிபியும் டெல்லி கேபிடள்ஸும் அருமையாக ஆடிவருகின்றன.
undefined
இந்த சீசனில் இதுவரை தலா 4 போட்டிகளில் ஆடியுள்ள டெல்லி கேபிடள்ஸும் ஆர்சிபியும் 3ல் வெற்றி பெற்று, புள்ளி பட்டியலில் முறையே 2 மற்றும் 3ம் இடங்களில் இருக்கும் நிலையில், இன்றைய போட்டியில் இந்த இரு அணிகளும் மோதுகின்றன.
undefined
இந்த போட்டியில் களமிறங்கும் உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணியை பார்ப்போம். டெல்லி கேபிடள்ஸ் அணியின் இளம் அதிரடி தொடக்க வீரர் பிரித்வி ஷாவிற்கு, கேகேஆருக்கு எதிரான போட்டியில் ரன் ஓடும்போது ஃபீல்டர் விட்ட த்ரோவில் காலில் அடிபட்டது. அதனால் அவர் அந்த போட்டியின் 2வது இன்னிங்ஸில் ஃபீல்டிங் கூட செய்யவில்லை. அவருக்கு பதிலாக ரஹானே தான் ஃபீல்டிங் செய்தார்.
undefined
அவரது காயம் சரியாகிவிட்டதா, அவர் இன்று ஆடுவாரா என்ற தகவல் திட்டவட்டமாக தெரிவிக்கப்படவில்லை. எனவே முன்னெச்சரிக்கையாக அவருக்கு இந்த போட்டியில் ஓய்வளிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே ஆர்சிபிக்கு எதிரான இன்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸின் தொடக்க வீரராக, தவானுடன் சீனியர் வீரர் ரஹானே களமிறங்க வாய்ப்புள்ளது.
undefined
இந்திய கிரிக்கெட் அணியின் மற்றும் ஐபிஎல்லின் சீனியர் வீரரான ரஹானே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் கேப்டன். ஆனால் டெல்லி கேபிடள்ஸ் அணியின் ஆடும் லெவனில் அவருக்கு இந்த சீசனில் இதுவரை இடம் கிடைக்காத நிலையில் இன்றைய போட்டியில் பிரித்வி ஷா ஆடவில்லையென்றால், அவர் ஆடுவார்.
undefined
அதேபோல கடந்த போட்டியில் ரிஸ்ட் ஸ்பின்னர் அமித் மிஷ்ராவுக்கு கை விரலில் அடிபட்டது. அதனால் அவர் வலியால் அவதிப்பட்டதையும், வலியை பொறுத்துக்கொண்டு கஷ்டப்பட்டு சில பந்துகளை வீசியதையும் பார்க்கமுடிந்தது. எனவே அவருக்கு பதிலாக இன்றைய போட்டியில் இடது கை ஸ்பின்னர் அக்ஸர் படேல் களமிறங்க வாய்ப்புள்ளது.
undefined
டெல்லி கேபிடள்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன்:ஷிகர் தவான், ரஹானேபிரித்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஸர் படேல்அமித் மிஷ்ரா, ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்ட்ஜே.
undefined
click me!