ஐபிஎல் 2020: அதனால் தான்டா அவரு “தல”..! நம்புனா 100% நம்பணும்.. இதெல்லாம் பார்த்து கோலி நிறைய கத்துக்கணும்

First Published Oct 5, 2020, 2:40 PM IST

தோல்விகளுடன் தொடங்கினாலும், பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே செம மாஸ் கம்பேக் கொடுத்துள்ள நிலையில், அதற்கு காரணம் கேப்டன் தோனி மற்றும் அணி நிர்வாகத்தின் தெளிவும் கூட.
 

ஐபிஎல்லில் ஆடிய அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றதுடன், அதிகபட்சமாக 8 சீசன்களில் ஃபைனலுக்கு முன்னேறி, அதில் 3 முறை கோப்பையை வென்று, ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாக திகழ்வது சிஎஸ்கே.
undefined
ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் 13வது ஐபிஎல் சீசன் சிஎஸ்கேவிற்கு அதிர்ச்சிகரமான தொடக்கமாக அமைந்தது. முதல் 4 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது சிஎஸ்கே. அதுவும் ஹாட்ரிக் தோல்விகள், சிஎஸ்கேவின் சரித்திரித்தில் அரிதினும் அரிதான சம்பவம்.
undefined
சிஎஸ்கேவின் தொடர் தோல்விகளை அடுத்து, சிஎஸ்கேவின் ஆடும் லெவன் காம்பினேஷன் குறித்த விமர்சனங்கள் எழுந்தன. வாட்சன், முரளி விஜய், கேதர் ஜாதவ் ஆகியோரது இடம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.
undefined
ஆனால் இனி தேறமாட்டார்; இவர் இனிமேல் ஜொலிப்பதற்கான கூறே தெரியவில்லை என்பதை அறிந்ததால் முரளி விஜய் அணியிலிருந்து நீக்கப்பட்டாரே தவிர, இதற்கு முந்தைய சீசன்களில் சிஎஸ்கேவின் மேட்ச் வின்னராக இருந்துள்ள ஷேன் வாட்சன், இன்னும் மேட்ச் வின்னரே என நம்பியது சிஎஸ்கே அணி நிர்வாகமும்,கேப்டன் தோனியும்.
undefined
ஷேன் வாட்சனின் கம்பேக்கிற்கு ஒரேயொரு நல்ல இன்னிங்ஸ் போதும் என்பது தோனிக்கும் சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கும் தெரியும். அதுமட்டுமல்லாது அவர் பயிற்சியில் சிறப்பாக ஆடியதை கண்ட தோனியும் ஃப்ளெமிங்கும், அவருக்கு களத்தில் சரியான தொடக்கம் அமையவில்ல என்பதை உணர்ந்து, அது அமைந்துவிட்டால் அவர் மேட்ச் வின்னர் என்பதால், அவர் மீது நம்பிக்கை வைத்து தொடர் வாய்ப்பளித்தனர்.
undefined
அந்த நம்பிக்கையை வீணடிக்காமல் ஷேன் வாட்சன், பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரிலிருந்தே அடித்து ஆடி, 83 ரன்களை குவித்து, தனது ஓபனிங் பார்ட்னர் டுப்ளெசிஸுடன் கடைசி வரை களத்தில் நின்று சிஎஸ்கே அணிக்கு அபார வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.
undefined
வீரர்கள் ஒருசில போட்டிகளில் சொதப்பினாலும், அவர்களது திறமையின் மீது நம்பிக்கை வைத்துவிட்டால், முழுமையாக நம்பி அவர்கள் சொதப்பினாலும் தொடர் வாய்ப்பளித்து, அவர்களை அணிக்காக வெற்றியை தேடிக்கொடுக்க வைப்பதுதான், ஒரு கேப்டனாக தோனியின் பெரிய பலமே. அதை மீண்டுமொரு முறை நிரூபித்து காட்டியுள்ளார். ஒன்றிரண்டு போட்டிகளில் சொதப்பும் வீரர்களை கூட உடனடியாக அடுத்த போட்டியிலேயே அணியிலிருந்து காலி செய்யும் கோலி மாதிரியான கேப்டன், தோனியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் இது.
undefined
ஷேன் வாட்சன் சிஎஸ்கேவிற்கு மாபெரும் வெற்றியை பெற்றுக்கொடுத்த நிலையில், வெற்றி புன்னகையுடன், போட்டிக்கு பின்னர் பேசிய தோனி, சிறிய சிறிய தவறுகளை சரி செய்தோம்; அவ்வளவுதான். எங்களுக்கு ஒரு அணியாக, ஒரு செயல்முறையின் மீது மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. டாப் ஆர்டர்களிடமிருந்து இந்த மாதிரியான ஒரு தொடக்கத்திற்காகத்தான் காத்திருந்தோம். இதுதான் அனுபவம் என்பது. வாட்சன் பயிற்சியில் அருமையாக ஆடினார். அதையே அவர் களத்தில் செயல்படுத்தினால் போதும். அவருக்கான நேரம் அமைவதுதான் முக்கியம். அது அமைந்துவிட்டது என்று தோனி தெரிவித்தார்.
undefined
இதன்மூலம், பல்வேறு கேள்விகள், விமர்சனங்களுக்கு மத்தியிலும் வாட்சன் மீது தோனி வைத்திருந்த நம்பிக்கையும், அவரது ஆட்டத்தின் மீதான நம்பிக்கையும் தெரிகிறது. அப்படி ஒரு வீரர் மீது நம்பிக்கை வைக்கும்போது மட்டும்தான் அவரிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டுவர முடியும். தோனி மட்டுமல்லாது, சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஃப்ளெமிங் மற்றும் ஒட்டுமொத்த அணி நிர்வாகமும் வாட்சன் மீது நம்பிக்கை வைத்திருந்தது. அந்த நம்பிக்கைக்கு ஏற்றாற்போல் அவரும் நடந்துகொண்டார்.
undefined
click me!