ஐபிஎல் 2020: செம பிளேயர்ங்க அந்த பையன்.. தோனி புகழாரம்

First Published Oct 30, 2020, 3:51 PM IST

ஐபிஎல்லில் இளம் வீரர்கள் அசத்திவரும் நிலையில், சிஎஸ்கே அணியின் இளம் திறமை ருதுராஜ் கெய்க்வாட்டை தோனி வெகுவாக புகழ்ந்துள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசனில் நட்சத்திர சீனியர் வீரர்கள் பலரும் பெரியளவில் ஆடாத நிலையில், தேவ்தத் படிக்கல், ராகுல் டெவாட்டியா, ருதுராஜ் கெய்க்வாட், ரவி பிஷ்னோய் உள்ளிட்ட இளம் வீரர்கள் அபாரமாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.
undefined
இந்த ஐபிஎல் சீசனே இளம் வீரர்களுக்கான சீசனாக அமைந்துள்ளது.
undefined
சிஎஸ்கே அணி தேர்வு ஆரம்பத்திலிருந்தே கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காதது பற்றி, கிட்டத்தட்ட பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்ட ஒரு போட்டிக்கு பின்னர் பேசிய தோனி, இளம் வீரர்களிடம் ஸ்பார்க்கை பார்க்கவில்லை என்று கூறினார். அது பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.
undefined
இனிமேல் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலை வந்தபிறகு, இளம் வீரர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பளிக்கப்படுகிறது. அந்தவகையில், இந்த சீசனில் தான் ஆடிய முதல் 3 போட்டிகளில், 0, 5, 0 என மிடில் ஆர்டரில் படுமோசமாக ஸ்கோர் செய்திருந்த ருதுராஜ் கெய்க்வாட், ஆர்சிபிக்கு எதிராக தொடக்க வீரராக இறக்கிவிடப்பட்டார். தொடக்க வீரராக இறங்கிய பின்னர் மிகச்சிறப்பாக ஆடினார் ருதுராஜ் கெய்க்வாட்.
undefined
ஆர்சிபிக்கு எதிராக 51 பந்தில் 65 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடித்துக்கொடுத்த ருதுராஜ் கெய்க்வாட், கேகேஆருக்கு எதிராக 72 ரன்கள் அடித்து சிஎஸ்கேவின் வெற்றிக்கு மீண்டும் காரணமாக திகழ்ந்தார்.
undefined
இந்நிலையில், அந்த போட்டிக்கு பின்னர் பேசிய தோனி, ருதுராஜ் அவரது திறமையை நிரூபித்துவிட்டார். துபாய் வந்ததுமே அவருக்கு கொரோனா பாசிட்டிவ் ஆனது. அதனால் அவர் மீது அதிக கவனம் செலுத்தப்படவில்லை. தற்போதைய மிகச்சிறந்த இளம் வீரர்களில் ருதுராஜ் கெய்க்வாட் முக்கியமானவர். அவர் நிறைய பேசமாட்டார். அவருக்கு முதல் வாய்ப்பு அளிக்கப்பட்டபோது, முதல் பந்திலேயே அவுட்டாகிவிட்டார். ஒருவரது திறமையை அறிந்துகொள்ள ஒரு பந்து போதாது. அதன்பின்னர் கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை அவர் அருமையாக பயன்படுத்தி அசத்திவிட்டார் என்று தோனி தெரிவித்துள்ளார்.
undefined
தோனியிடம் நல்ல வீரர் என்ற நன்மதிப்பை பெற்றுவிட்டார் ருதுராஜ் கெய்க்வாட். எனவே கண்டிப்பாக சிஎஸ்கே அணி அவரை தக்கவைக்கும் என்பதும் சிஎஸ்கேவில் அவர் தொடர்ந்து இருப்பார் என்பதும் உறுதியாகிவிட்டது.
undefined
click me!