ஐபிஎல் 13வது சீசனில் இன்று சிஎஸ்கேவும் கேகேஆரும் மோதும் போட்டி துபாயில் நடக்கிறது. ஏற்கனவே பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்ட சிஎஸ்கே அணி, இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில், ரிலாக்ஸாக இந்த போட்டியில் ஆடுகிறது.
ஆனால் பிளே ஆஃபிற்கு முன்னேற கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் கேகேஆர் களமிறங்குவதால் அந்த அணிக்குத்தான் நெருக்கடி.
இந்த போட்டியில் சிஎஸ்கே அணியில் 3 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த சீசனின் தொடக்கத்திலிருந்து சிஎஸ்கே அணியில் பேட்டிங், ஃபீல்டிங் ஆகிய இரண்டிலுமே மிகச்சிறப்பாக செயல்பட்டுவந்த டுப்ளெசிஸ் நீக்கப்பட்டு, ஷேன் வாட்சன் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த போட்டியால் சிஎஸ்கேவின் தலையெழுத்து தீர்மானிக்கப்படாது என்பதால், ஏற்கனவே பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், டுப்ளெசிஸ் நீக்கப்பட்டுள்ளார்.
மேலும் இம்ரான் தாஹிருக்கு பதிலாக லுங்கி இங்கிடியும், மோனு குமாருக்கு பதிலாக ரிஸ்ட் ஸ்பின்னர் கரன் ஷர்மாவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சிஎஸ்கே அணி:ருதுராஜ் கெய்க்வாட், வாட்சன், ராயுடு, ஜெகதீசன், தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஜடேஜா, சாம் கரன், மிட்செல் சாண்ட்னெர், தீபக் சாஹர், கரன் ஷர்மா, லுங்கி இங்கிடி.
கேகேஆர் அணியில் பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக ரிங்கு சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.
கேகேஆர் அணி:கில், ராகுல் திரிபாதி, ராணா, தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), மோர்கன்(கேப்டன்), சுனில் நரைன், பாட் கம்மின்ஸ், ரிங்கு சிங், ஃபெர்குசன், நாகர்கோட்டி, வருண் சக்கரவர்த்தி.