#CSKvsKKR சிஎஸ்கே அணியில் 2 அதிரடி மாற்றங்கள்.. தமிழக இளம் ஸ்பின்னருக்கு வாய்ப்பு

First Published Oct 29, 2020, 6:14 PM IST

சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் சிஎஸ்கேவும் கேகேஆரும் மோதுகின்றன. புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் சிஎஸ்கே, இந்த சீசனில் பிளே ஆஃபிற்கு முன்னேறப்போவதில்லை. எனவே சிஎஸ்கேவிற்கு இழப்பதற்கு ஒன்றுமே இல்லை. ஆனால் கேகேஆர் அணி பிளே ஆஃபிற்கு முன்னேற, கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயம் உள்ளது.
undefined
அந்தவகையில், எந்த அழுத்தமும் இல்லாத சிஎஸ்கே அணியும், வெற்றி கட்டாயத்தில் கடும் நெருக்கடியில் கேகேஆரும் இன்று மோதுகின்றன.
undefined
இந்த போட்டிக்கான சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது. உள்நாட்டு போட்டிகளில் அசத்திய தமிழகத்தை சேர்ந்த இளம் ஸ்பின்னர் சாய் கிஷோருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பளிக்கப்படலாம். அதேபோல மோனு குமாருக்கு பதிலாக கேஎம் ஆசிஃபுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
undefined
உத்தேச சிஎஸ்கே அணி:டுப்ளெசிஸ், ருதுராஜ் கெய்க்வாட், ராயுடு, ஜெகதீசன், தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), சாம் கரன், ஜடேஜாசாய் கிஷோர், மிட்செல் சாண்ட்னெர், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர், மோனு குமார்கேஎம் ஆசிஃப்.
undefined
கேகேஆர் அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் அந்த அணி களமிறங்கும்.உத்தேச கேகேஆர் அணி:ஷுப்மன் கில், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), இயன் மோர்கன்(கேப்டன்), சுனில் நரைன், பாட் கம்மின்ஸ், ஃபெர்குசன், நாகர்கோட்டி, பிரசித் கிருஷ்ணா, வருண் சக்கரவர்த்தி.
undefined
click me!