இன்னும் 2 வருஷத்துக்கு தல தோனி தான் சிஎஸ்கே அணியின் கேப்டன்

First Published Oct 29, 2020, 2:01 PM IST

நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி சரியாக ஆடாமல், பிளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்டாலும், சிஎஸ்கே அணியை ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாக உருவாக்கிய கேப்டன் தோனி தான் தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்களிலும் அந்த அணியின் கேப்டனாக செயல்படுவார்.
 

ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியும், ஆடிய அனைத்து சீசன்களிலும்(2019 வரை) பிளே ஆஃபிற்கு முன்னேறிய ஒரே அணி என்ற சாதனைக்கும் பெருமைக்கும் சொந்தக்கார அணியுமான சிஎஸ்கே, இந்த சீசனில் தான் முதல்முறையாக பிளே ஆஃபிற்கு முன்னேறாமல் வெளியேறுகிறது.
undefined
ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகிய சிஎஸ்கே அணியின் சீனியர் நட்சத்திர வீரர்கள் இந்த சீசனில் ஆடாதது பெரும் பாதிப்பாக அமைந்தது. பிராவோவும் தொடக்கம் முதல் ஆட முடியவில்லை. காயம் காரணமாக முதல் சில போட்டிகளில் ஆட இயலாத அவர், இடையில் சில போட்டிகளில் மட்டும் ஆடினார்; பின்னர் மீண்டும் காயத்தால், ஐபிஎல்லில் இருந்து விலகி வெஸ்ட் இண்டீஸுக்கே சென்றுவிட்டார்.
undefined
இந்த சீசன் சிஎஸ்கே அணிக்கு சரியாக அமையவில்லை. ஆடும் லெவன் காம்பினேஷன் தேர்வு, தோனியின் கேப்டன்சி, வீரர்களின் மோசமான ஃபார்ம் என அனைத்துமே இந்த முறை கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகின. வயது மூத்த வீரர்களை வைத்து ஆடுவதும் விமர்சனத்துக்குள்ளாகியது. தோனி இந்த சீசனுடன் விலகிவிட வேண்டும் என்ற குரல்களும் உள்ளன.
undefined
ஒரு சீசனில் பிளே ஆஃபிற்கு முன்னேற முடியாமல் போனதற்கே சிஎஸ்கே கடும் விமர்சனங்களை சந்திக்கிறது என்றால், அந்தளவிற்கான உயர்ந்த ஸ்டாண்டர்டை செட் செய்ததே தோனி தான். ஐபிஎல்லில் 2019 வரை சிஎஸ்கே அணி ஆடிய 10 சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு முன்னேறியதுடன், 8 முறை ஃபைனலுக்கு சென்று, அதில் 3 முறை கோப்பையை வென்று, ஐபிஎல்லின் வெற்றிகரமான மற்றும் அசைக்கமுடியாத மாபெரும் சக்தியாக உருவாக்கி கொடுத்தவர் தோனி.
undefined
அந்தவகையில் தோனியை அவ்வளவு எளிதாக சிஎஸ்கே அணி தூக்கிப்போடாது. சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி தொடர்வது குறித்தும் சிஎஸ்கே அணிக்கும் தோனிக்கும் இடையேயான உறவு குறித்தும் கவுதம் கம்பீர் பேசியுள்ளார்.
undefined
ஈஎஸ்பின் கிரிக் இன்ஃபோவிற்கு பேசிய கம்பீர், சிஎஸ்கே அணிக்காக தோனி மாபெரும் பங்களிப்பு செய்துள்ளார். தோனியை சிஎஸ்கே அணி நிர்வாகம் மிகச்சிறப்பாக அவருக்கான மரியாதையுடனும் உரிமையை கொடுத்தும் நடத்துகிறது. தோனியை சிஎஸ்கே கையாளும் மற்றும் நடத்தும் விதத்தை பார்த்து, மற்ற அணிகளும் தங்கள் கேப்டனை எப்படி நடத்த வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்.
undefined
தோனி 3 முறை ஐபிஎல் கோப்பையையும் 2 முறை சாம்பியன்ஸ் லீக்கையும் வென்று கொடுத்துள்ளார். ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸுக்கு அடுத்த வெற்றிகரமான அணியாக சிஎஸ்கேவை உருவாக்கியுள்ளார். எனவே தோனி தான் அவர்கள் கேப்டன் என்பதை சிஎஸ்கேவும் தெரிவித்துள்ளது. சிஎஸ்கே மற்றும் தோனி இடையே பரஸ்பர புரிதலும் மரியாதையும் உள்ளது. அதனால் தோனி சிஎஸ்கே அணிக்கு கடமையுணர்வுடன் நடந்துகொள்கிறார். தோனி சிஎஸ்கே அணிக்காக அவரது இதயம், ஆத்மா, கடும் உழைப்பு, தூங்காத பல இரவுகள் என அனைத்தையும் வழங்கியுள்ளார் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.
undefined
அதேபோல, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் அஞ்சும் சோப்ரா, இன்னும் 2 ஆண்டுகளுக்கு சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி தான் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
undefined
click me!