ஐபிஎல் 2020: பாண்டிங் மட்டுமல்ல; யாருமே இதை எதிர்பார்த்திராத திருப்பம்..! டெல்லி கேபிடள்ஸுக்கு பின்னடைவு

First Published Oct 5, 2020, 8:56 PM IST

ஐபிஎல் 13வது சீசனிலிருந்து டெல்லி கேபிடள்ஸ் அணியின் சீனியர் வீரர் விலகியுள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. வழக்கம்போலவே இந்த சீசனிலும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ள டெல்லி கேபிடள்ஸ் அணி இந்த சீசனில் அருமையாக ஆடிவருகிறது.
undefined
இன்று ஆர்சிபிக்கு எதிராக டெல்லி அணி ஆடிவரும் நிலையில், இதற்கு முந்தைய 4 போட்டிகளில் சிறப்பாக ஆடி 3ல் வெற்றியை பெற்றது டெல்லி கேபிடள்ஸ் அணி.
undefined
டெல்லி கேபிடள்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக, சர்வதேச கிரிக்கெட்டின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான ரிக்கி பாண்டிங் இருப்பதால், பக்காவாக திட்டம் தீட்டி, ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இளமையும் அனுபவமும் கலந்த டெல்லி கேபிடள்ஸ் அணி திட்டங்களை களத்தில் சிறப்பாக செயல்படுத்தி வெற்றிகளை பெற்றுவருகிறது.
undefined
இந்நிலையில், அந்த அணியின் சீனியர் ஸ்பின்னரும், ஐபிஎல்லின் வெற்றிகரமான ஸ்பின்னருமான அமித் மிஷ்ரா, காயம் காரணமாக இந்த சீசனிலிருந்து விலகியுள்ளார். கேகேஆருக்கு எதிரான கடந்த போட்டியில் ஆடும்போது அமித் மிஷ்ராவுக்கு அவரது வலது கை விரலில் காயம் ஏற்பட்டது. அதன்பின்னர் கஷ்டப்பட்டுத்தான் தனது பவுலிங் கோட்டாவின் எஞ்சிய பந்துகளை வீசி முடித்தார்.
undefined
அந்த காயம் காரணமாக அமித் மிஷ்ரா இந்த சீசனிலிருந்து முழுவதுமாக விலகியுள்ளார். சீனியர் ரிஸ்ட் ஸ்பின்னரான அமித் மிஷ்ரா இந்த சீசனிலிருந்து விலகியிருப்பது அந்த அணிக்கு பெரும் இழப்பு.
undefined
அமித் மிஷ்ரா விலகியிருப்பதால், அந்த அணியின் மற்ற 2 ஸ்பின்னர்களான அஷ்வினும் அக்ஸர் படேலும் காயமடையாமல் சீசன் முழுவதும் ஆடியாக வேண்டும்.
undefined
click me!