DCvsRCB: ஆர்சிபி அணியில் 2 அதிரடி மாற்றங்கள்; டெல்லி அணியில் வேற வழியே இல்லாமல் ஒரு மாற்றம்..! டாஸ் ரிப்போர்ட்

First Published Oct 5, 2020, 7:57 PM IST

டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளார் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி.
 

ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் ஆர்சிபியும் மோதுகின்றன. முதல் முறையாக கோப்பையை எதிர்நோக்கியுள்ள இந்த 2 அணிகளுமே, இந்த சீசனில் இதுவரை ஆடிய 4 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்றுள்ள நிலையில், 4வது வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் முனைப்பில் களமிறங்கியுள்ளன.
undefined
துபாயில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் விராட் கோலி, பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
undefined
டெல்லி கேபிடள்ஸ் அணியில், கடந்த போட்டியில் விரலில் காயம் ஏற்பட்ட ரிஸ்ட் ஸ்பின்னர் அமித் மிஷ்ரா இந்த போட்டியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக அக்ஸர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார்.
undefined
டெல்லி கேபிடள்ஸ் அணி:பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ககிசோ ரபாடா, ஹர்ஷல் படேல், அன்ரிக் நோர்ட்ஜே.
undefined
ஆர்சிபி அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குர்கீரத் மன் நீக்கப்பட்டு முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். ரிஸ்ட் ஸ்பின்னர் ஆடம் ஸாம்பாவிற்கு வயிற்றில் சிறிய பிரச்னை காரணமாக அவதிப்படுவதால், அவருக்கு பதிலாக மொயின் அலி சேர்க்கப்பட்டுள்ளார்.
undefined
ஆர்சிபி அணி:ஆரோன் ஃபின்ச், தேவ்தத் படிக்கல், விராட் கோலி(கேப்டன்), டிவில்லியர்ஸ்(விக்கெட் கீப்பர்), மொயின் அலி, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், இசுரு உடானா, நவ்தீப் சைனி, சாஹல், முகமது சிராஜ்.
undefined
click me!