ஐபிஎல் 2020: அமித் மிஷ்ராவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு.. ஆர்சிபி ஸ்பின்னரை தட்டி தூக்கிய டெல்லி கேபிடள்ஸ்

First Published Oct 19, 2020, 4:31 PM IST

காயத்தால் இந்த சீசனிலிருந்து விலகிய சீனியர் ஸ்பின்னர் அமித் மிஷ்ராவுக்கு மாற்று வீரரை அறிவித்துள்ளது டெல்லி கேபிடள்ஸ் அணி.
 

ஐபிஎல் 13வது சீசனில், முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கிய டெல்லி கேபிடள்ஸ் அணி, தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கின் வழிகாட்டுதலில், ஷ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சியில் மிகச்சிறப்பாக ஆடிவருகிறது.
undefined
இந்த சீசனில் இதுவரை ஆடிய 9 போட்டிகளில் 7 வெற்றிகளை பெற்று 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. டெல்லி கேபிடள்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிட்டது.
undefined
டெல்லி கேபிடள்ஸ் அணி, பேட்டிங், ஸ்பின் பவுலிங், ஃபாஸ்ட் பவுலிங் என அனைத்துவகையிலும் மிகச்சிறந்த வீரர்களை பெற்ற வலுவான அணியாக திகழ்கிறது.
undefined
இந்த சீசனில் அனைத்துவகையிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை குவித்துவரும் நிலையில், வீரர்களின் காயம் தான் அந்த அணிக்கு சற்று பின்னடைவாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் அஷ்வின், காயத்தால் சில போட்டிகளில் ஆடமுடியாமல் போயிற்று. அதன்பின்னர் இஷாந்த் சர்மா மற்றும் சீனியர் ஸ்பின்னர் அமித் மிஷ்ரா காயத்தால் சீசனிலிருந்தே விலகினர். ரிஷப் பண்ட் காயம் காரணமாக கடந்த 2 போட்டிகளில் ஆடவில்லை.
undefined
இப்படியாக வீரர்கள் காயம் அந்த அணிக்கு சவாலாக இருந்தாலும், அந்த சவாலையெல்லாம் திறம்பட எதிர்கொண்டு வெற்றிகளை குவித்துவருகிறது டெல்லி கேபிடள்ஸ் அணி.
undefined
டெல்லி கேபிடள்ஸ் அணியின் சீனியர் ரிஸ்ட் ஸ்பின்னரான அமித் மிஷ்ரா இந்த சீசனில் சிறப்பாக வீசிவந்தார். 3 போட்டிகளில் ஆடி 3 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியிருந்தாலும், மிடில் ஓவர்களில் எதிரணியின் ரன்களை கட்டுப்படுத்தி நெருக்கடியை அதிகரித்து, விக்கெட்டுகள் விழ காரணமாக இருந்தார்.
undefined
கேகேஆருக்கு எதிரான போட்டியில் அவருக்கு காயம் ஏற்பட்டதையடுத்து, அவர் இந்த சீசனிலிருந்தே விலகினார். இந்நிலையில், அவருக்கு மாற்று வீரராக ஆர்சிபி அணியின் பயிற்சி பவுலராக இருந்துவரும் பிரவீன் துபேவை ஒப்பந்தம் செய்துள்ளது டெல்லி கேபிடள்ஸ் அணி.
undefined
கர்நாடகாவை சேர்ந்த 27 வயது ரிஸ்ட் ஸ்பின்னர் பிரவீன் துபே, உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக ஆடியுள்ளார். 2016ம் ஆண்டிலிருந்து ஆர்சிபி அணியில் இருந்துவரும் அவருக்கு போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் வலைப்பயிற்சியில் ஆர்சிபி வீரர்களுக்கு பந்துவீசிவருகிறார். இந்நிலையில், அமித் மிஷ்ராவுக்கு மாற்று வீரராக அவரை டெல்லி கேபிடள்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
undefined
click me!