ஐபிஎல் 2020: அந்த அணியின் சூழலே சரியா இல்ல; ஏதோ தப்பா இருக்கு..! சந்தேகிக்கும் லாரா

First Published Oct 19, 2020, 3:30 PM IST

கேகேஆர் அணியின் சூழல் சரியில்லை என்று முன்னாள் ஜாம்பவான் பிரயன் லாரா சந்தேகித்துள்ளார்.
 

ஐபிஎல்லில் 2 முறை கோப்பையை வென்ற அணி கேகேஆர். மும்பை இந்தியன்ஸ்(4), சிஎஸ்கே(3) ஆகிய அணிகளுக்கு அடுத்த வெற்றிகரமான அணி கேகேஆர் தான்.
undefined
2011லிருந்து 2017 வரை கேகேஆர் அணியை வழிநடத்திய கம்பீர் விலகியபிறகு, 2018லிருந்து தினேஷ் கார்த்திக் கேப்டனாக இருந்து வழிநடத்திவந்தார்.
undefined
நடப்பு சீசனின் முதல் பாதி லீக் ஆட்டங்களுக்கு கேப்டன்சி செய்த தினேஷ் கார்த்திக், பாதியில் திடீரென கேப்டன்சியிலிருந்து விலகியதையடுத்து, இயன் மோர்கன் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
undefined
சீசனின் இடையே கேப்டன்சி மாற்றத்தை முன்னாள் ஜாம்பவான்கள், ரசிகர்கள் என யாருமே விரும்பவில்லை. தினேஷ் கார்த்திக் அவராகவே விலகுவதாக கூறியிருந்தாலும், வெளியிலிருந்து பார்ப்பவர்கள் அதை அப்படி பார்க்கவில்லை. தினேஷ் கார்த்திக் கேப்டன்சியிலிருந்து விலக நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார் என்றே பார்க்கப்படுகிறது.
undefined
இந்நிலையில், கேகேஆர் அணி குறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் முன்னாள் ஜாம்பவானும் ஆல்டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவருமான பிரயன் லாரா, கேகேஆர் அணிக்கு கேப்டன்சி ஒரு பிரச்னையே இல்லை. சுனில் நரைன் தனி ஒருவனாக 2 போட்டிகளை வென்று கொடுத்தார்.
undefined
ஆண்ட்ரே ரசல் ஸ்கோர் செய்ய வேண்டும். யார் வேண்டுமானாலும் அணியை வழிநடத்தலாம். எனக்கு தெரிந்து, கேகேஆர் அணி தங்களைத் தாங்களே நெருக்கடிக்கு உள்ளாக்கி கொள்கிறார்கள். கேப்டனை மாற்றியிருக்கிறார்கள். கேகேஆர் அணியில் ஏதோ சரியில்லை; ஏதோ தவறாக இருப்பதாக தெரிகிறது என்று பிரயன் லாரா தெரிவித்துள்ளார்.
undefined
click me!