CSK vs RR: உன்னால ஒரு யூஸும் இல்ல; உபத்திரவம் தான்..! மீண்டும் மீண்டும் அசிங்கப்படும் சீனியர் வீரர்

First Published Oct 19, 2020, 2:14 PM IST

சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 13வது சீசனை வெற்றிகரமாக தொடங்கி, புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, முதல் 2 வெற்றிகளுக்கு பிறகு தொடர் தோல்விகளை தழுவி, 9 போட்டிகளில் வெறும் 3 வெற்றிகளை பெற்று, தற்போது புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
undefined
சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 4 அணிகளும் ஒரே நிலையில் உள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கேவும் ராஜஸ்தான் ராயல்ஸும் மோதுகின்றன.
undefined
அபுதாபியில் நடக்கும் இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஒரேயொரு மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது. ஜெய்தேவ் உனாத்கத் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக வருண் ஆரோன் சேர்க்கப்படலாம்.
undefined
2017 சீசனில் புனே வாரியர்ஸ் சூப்பர்ஜெயிண்ட்ஸ் அணிக்காக ஆடி, அருமையாக பந்துவீசிய ஜெய்தேவ் உனாத்கத் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து ரூ.12 கோடிக்கு 2018 ஐபிஎல் சீசனில் ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ஆனால் அதற்கு ஒருபோதும் நியாயம் செய்ததில்லை உனாத்கத். உள்நாட்டு தொடர்களில் நன்றாக வீசும் உனாத்கத்தின் பவுலிங்கை, ஐபிஎல்லில் ஒவ்வொரு சீசனிலும் எதிரணி வீரர்கள் அடித்து நொறுக்கிவிடுகின்றனர்.
undefined
ஆர்சிபிக்கு எதிரான கடந்த போட்டியில், உனாத்கத் தான் வெற்றியை தாரைவார்த்தார். ஆர்சிபி அணிக்கு கடைசி 2 ஓவரில் 35 ரன்கள் தேவைப்பட்டது. ஆர்ச்சருக்கும் உனாத்கத்துக்கும் தலா ஒவ்வொரு ஓவர் மீதமிருந்த நிலையில், முக்கியமான அந்த 19வது ஓவரை ஆர்ச்சரிடம் கொடுக்காமல் உனாத்கத்திடம் கொடுத்தார் கேப்டன் ஸ்மித். அந்த ஓவரில் 25 ரன்களை வாரிவழங்கி, ஒரே ஓவரில் வெற்றியை தாரை வார்த்து கொடுத்துவிட்டார் உனாத்கத்.
undefined
உனாத்கத், பவர்ப்ளே, மிடில் ஓவர்கள், டெத் ஓவர் என எந்த ஸ்பெல்லிலுமே ஒழுங்காக வீசுவதில்லை. எனவே அவர் நீக்கப்பட்டு இன்றைய போட்டியில் வருண் ஆரோன் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
undefined
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன்:ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித்(கேப்டன்), ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), ரியான் பராக், ராகுல் டெவாட்டியா, ஷ்ரேயாஸ் கோபால், ஜோஃப்ரா ஆர்ச்சர், வருண் ஆரோன், கார்த்திக் தியாகி.
undefined
click me!