CSK vs RR: பிராவோவுக்கு பதிலா இறங்கப்போவது கண்டிப்பா அவருதான்..! சிஎஸ்கே அணியில் 2 அதிரடி மாற்றங்கள்

First Published Oct 19, 2020, 2:55 PM IST

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் சிஎஸ்கே அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல்லில் ஆடிய அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்ற ஒரே அணி என்ற சாதனைக்கும் பெருமைக்கும் சொந்தக்கார சிஎஸ்கே அணி, இந்த சீசனில் பிளே ஆஃபிற்கு முன்னேறுவது மிகக்கடினம்.
undefined
சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 4 அணிகளும் ஒரே நிலையில் உள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கேவும் ராஜஸ்தான் ராயல்ஸும் மோதுகின்றன.
undefined
இந்த போட்டியில் சிஎஸ்கே அணியில் பிராவோ ஆடமாட்டார். டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான கடந்த போட்டியில் வலது தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால், அவர் அந்த போட்டியிலேயே பாதியில் களத்தை விட்டு வெளியேறினார். அதனால் தான் கடைசி ஓவரை ஜடேஜா வீச வேண்டிய சூழல் உருவாகி, சிஎஸ்கே தோற்றது. எனவே பிராவோ காயம் காரணமாக ஆடமாட்டார் என்பதால், அவருக்கு பதிலாக ஃபாஸ்ட் பவுலர் ஜோஷ் ஹேசில்வுட் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கலாம்.
undefined
லுங்கி இங்கிடி சேர்க்கப்பட வாய்ப்பில்லை. ஹேசில்வுட் 140 கிமீ வேகத்திற்கு மேல் வீசக்கூடிய பவுலர். சிஎஸ்கேவில் அவ்வளவு வேகத்தில் வீசக்கூடிய பவுலர் ஹேசில்வுட் தான். அப்படி ஒரு பவுலர் அணிக்கு தேவை என்கிற வகையில், அவர் தான் பிராவோவுக்கு பதிலாக சேர்க்கப்படுவார்.
undefined
அதேபோல, கரன் ஷர்மாவுடன் 2வது ஸ்பின் ஆப்சனாக ஜடேஜாவை நம்பியிருக்க முடியாது என்பதால், கேதர் ஜாதவ் நீக்கப்பட்டு, பியூஷ் சாவ்லா சேர்க்கப்படுவார்.
undefined
ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் இந்த சீசனிலிருந்து விலகிய நிலையில், அவர்களுக்கான மாற்று வீரர்கள் கூட எடுக்கப்படவில்லை. சீசனின் தொடக்கத்திலேயே விலகிய வீரர்களுக்கே மாற்று வீரர்கள் எடுக்கப்படவில்லை எனும்போது, சீசனின் இடையில் ஆடமுடியாமல் போகும் பிராவோவிற்கு மாற்று வீரர் எடுக்க வேண்டும் என்று சிஎஸ்கேவிடம் எதிர்பார்க்க முடியாது.
undefined
click me!