DC vs RR: பவர் ஹிட்டர்களை இழந்து தவிக்கும் டெல்லி கேபிடள்ஸ்.. இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

First Published Oct 14, 2020, 4:22 PM IST

டெல்லி கேபிடள்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 13வது சீசன் பாதி கட்டத்தை கடந்துவிட்ட நிலையில், இந்த சீசனில், ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியான மும்பை இந்தியன்ஸ் மற்றும் முதல் முறையாக கோப்பையை எதிர்நோக்கியுள்ள ஆர்சிபி, டெல்லி கேபிடள்ஸ் ஆகிய அணிகள் சிறப்பாக ஆடி வெற்றிகளை பெற்று, புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்திவருகின்றன.
undefined
குறிப்பாக ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இளமையும் அனுபவமும் கலந்த டெல்லி கேபிடள்ஸ் அணி, தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கின் வழிகாட்டுதலின்படி, சிறப்பாக ஆடி, 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது. இந்த சீசனில் பிளே ஆஃபிற்கு முன்னேறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
undefined
இந்நிலையில், இன்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பென் ஸ்டோக்ஸின் வருகைக்கு பிறகு வலுப்பெற்றுள்ளது.
undefined
டெல்லி கேபிடள்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று துபாயில் நடக்கிறது. இந்த சீசனில் இந்த இரு அணிகளும் ஏற்கனவே மோதிய போட்டியில் டெல்லி கேபிடள்ஸ் அணி தான் வெற்றி பெற்றது.
undefined
இன்றைய போட்டியில் இரு அணிகளுமே, கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கும். ஆடும் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை.
undefined
கடந்த போட்டியில் டெல்லி அணியில் ரிஷப் பண்ட் ஆடாததால், விக்கெட் கீப்பராக அலெக்ஸ் கேரியை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், ஹெட்மயர் கழட்டிவிடப்பட்டார். அதேபோல ரஹானேவும் சேர்க்கப்பட்டிருந்தார். அந்தவகையில் இன்றைய போட்டியில் அதே ஆடும் லெவனுடன் தான் டெல்லி கேபிடள்ஸ் இறங்கும். ரிஷப் பண்ட் மற்றும் ஹெட்மயர் ஆகிய இரு பவர் ஹிட்டர்களும் ஆடாதது டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு சற்றே பின்னடைவுதான்.
undefined
டெல்லி கேபிடள்ஸ் அணி:பிரித்வி ஷா, ஷிகர் தவான், ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், அக்ஸர் படேல், ஹர்ஷல் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்யா.
undefined
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் மாற்றம் எதுவும் செய்யப்பட வாய்ப்பில்லை.ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ், ஸ்டீவ் ஸ்மித்(கேப்டன்), சஞ்சு சாம்சன், ரியான் பராக், ராபின் உத்தப்பா, ராகுல் டெவாட்டியா, ஷ்ரேயாஸ் கோபால், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜெய்தேவ் உனாத்கத், கார்த்திக் தியாகி.
undefined
click me!