ஐபிஎல் 2020: ஒருவழியா தோனி வாயில் இருந்து அந்த வார்த்தை வந்துருச்சு

First Published Oct 14, 2020, 3:19 PM IST

சன்ரைசர்ஸுக்கு எதிரான வெற்றி, சிஎஸ்கே அணிக்கும் கேப்டன் தோனிக்கும் நம்பிக்கையளித்திருப்பதுடன், பிளே ஆஃப் வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது.
 

ஐபிஎல் 13வது சீசன் பாதி கட்டத்தை கடந்துவிட்ட நிலையில், முதல் பாதியில் தொடர் தோல்விகளை தழுவி, 7 போட்டிகளில் வெறும் 2 வெற்றிகளை மட்டுமே பெற்ற சிஎஸ்கே அணி, சன்ரைசர்ஸுக்கு எதிரான நேற்றைய போட்டியில் வெற்றி பெற்று, கம்பேக் கொடுத்துள்ளதுடன், பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.
undefined
இதுவரை ஆடிய அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்ற ஒரே அணி என்ற சாதனைக்கும் பெருமைக்கும் சொந்தக்கார அணியான சிஎஸ்கே, இந்த சீசனில் பிளே ஆஃபிற்கு தகுதிபெறாதோ என்ற சந்தேகம் எழுமளவிற்கு சொதப்பியது.
undefined
ஆனால் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் சன்ரைசர்ஸை எதிர்கொண்ட சிஎஸ்கே அணி வீரர்கள், பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பறித்தனர். இந்த சீசன் தொடங்கியதிலிருந்து, பேட்டிங்கில் டுப்ளெசிஸையே பெரிதாக சார்ந்திருந்த சிஎஸ்கே அணி, சன்ரைசர்ஸூக்கு எதிராக அவர் டக் அவுட்டான போதிலும், 167 ரன்களை குவித்தது என்பது சிஎஸ்கே அணிக்கு நல்ல விஷயம்.
undefined
168 ரன்கள் என்ற கடினமில்லாத இலக்கை, வார்னர், பேர்ஸ்டோ, வில்லியம்சன் ஆகிய சிறந்த வீரர்களை கொண்ட சன்ரைசர்ஸ் அணியை அடிக்கவிடாமல் தடுத்தனர் சிஎஸ்கே பவுலர்கள். ஒட்டுமொத்தமாகவே பேட்டிங், பவுலிங் என 2 வகையிலும் சிஎஸ்கேவின் சிறந்த செயல்பாட்டால் வெற்றி வசமாகியுள்ளது. இதன்மூலம் பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது சிஎஸ்கே.
undefined
கடந்த சில போட்டிகளாக பேட்டிங்கில் வீரர்கள் சொதப்பியதால், போட்டிகளுக்கு பின்னர் பேசும்போது, அதை சுட்டிக்காட்டி வருத்தம் தெரிவித்த கேப்டன் தோனி, சன்ரைசர்ஸுக்கு எதிரான ஆட்டத்தால் மகிழ்ச்சியடைந்தார்.
undefined
போட்டிக்கு பின்னர் பேசிய தோனி, ஒருவழியாக இந்த 2 புள்ளிகளை பெற்றுவிட்டோம். சில போட்டிகளில் நாம் நினைத்தது நடக்காது; சில போட்டிகளில் நாம் நினைத்தது நடந்துவிடும்; அதுதான் டி20. இன்று ஒட்டுமொத்தமாக ஒரு அணியாக சிறப்பான செயல்பாடு. குறிப்பாக பேட்ஸ்மேன்கள் நன்றாக ஆடினார்கள். பேட்ஸ்மேன்கள் சூழலை நன்கறிந்து சிறப்பாக ஆடினர் என்று தோனி பாராட்டினார்.
undefined
பேட்டிங் தான் பிரச்னையாக இருக்கிறது என்று தோனி கூறிவந்தநிலையில், ஒருவழியாக பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டிருப்பது தோனிக்கும் சிஎஸ்கேவிற்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது. சாம் கரனையும் வெகுவாக பாராட்டினார் தோனி.
undefined
click me!