திணறிய கோலி; தெறிக்கவிட்ட டிவில்லியர்ஸ்..! கடைசி 5 ஓவரில் 83 ரன்கள்.. கேகேஆருக்கு சவாலான இலக்கு

First Published Oct 12, 2020, 9:25 PM IST

கேகேஆருக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி, 20 ஓவரில் 194 ரன்களை குவித்து, 195 ரன்கள் என்ற கடின இலக்கை கேகேஆருக்கு நிர்ணயித்துள்ளது.
 

ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான போட்டி சிறிய மைதானமான ஷார்ஜாவில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார்.
undefined
தொடக்க வீரர்கள் ஆரோன் ஃபின்ச் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகிய இருவரும், சிறிய மைதானமான ஷார்ஜாவில் மிரட்டலான தொடக்கத்தை அமைத்து கொடுக்காவிட்டாலும் நல்ல தொடக்க தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். படிக்கல்லும் ஃபின்ச்சும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 7.4 ஓவரில் 67 ரன்கள் அடித்தனர்.
undefined
படிக்கல் 23 பந்தில் 32 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, ஃபின்ச்சும் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் கோலியும் டிவில்லியர்ஸும் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆரம்பித்தாலும், பதினாறாவது ஓவரிலிருந்து அடித்து ஆரம்பித்தார் டிவில்லியர்ஸ். பதினைந்து ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு ஆர்சிபி அணி 111 ரன்கள் அடித்திருந்தது.
undefined
நாகர்கோட்டி வீசிய பதினாறாவது ஓவரில் 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி விளாசிய டிவில்லியர்ஸ், கம்மின்ஸ் வீசிய 17வது ஓவரிலும் 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார். 18வது ஓவரில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடித்து 23 பந்தில் அரைசதம் அடித்த டிவில்லியர்ஸ், 19வது ஓவரில் ஒரு பந்தை மட்டுமே ஏதிர்கொண்டு, அதில் சிங்கிள் அடித்தார். அந்த ஓவரில் கோலி ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தார்.
undefined
இன்னிங்ஸின் கடைசி ஓவரை ரசல் வீச, அந்த ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்த டிவில்லியர்ஸ், 2வது பந்தில் ரன் அடிக்கவில்லை. 3வது பந்தில் பவுண்டரி அடித்தார். அந்த பந்து நோ பால் என்பதால், வீசப்பட்ட ஃப்ரீஹிட்டில் 2 ரன்கள் மட்டுமே அடித்தார். இதையடுத்து 4வது பந்திலும் 2 ரன்கள் மட்டுமே கிடைத்தன. கடைசி 2 பந்தில் டிவில்லியர்ஸூம் கோலியும் ஆளுக்கொரு சிங்கிள் அடிக்க, 20 ஓவரில் 194 ரன்களை குவித்தது ஆர்சிபி.
undefined
பதினைந்து ஓவர் முடிவில் 111 ரன்கள் அடித்திருந்தது ஆர்சிபி. கடைசி ஐந்து ஓவரில் டிவில்லியர்ஸின் காட்டடியால் ஆர்சிபிக்கு 83 ரன்கள் கிடைத்தது. டிவில்லியர்ஸ் 33 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 73 ரன்களை குவித்தார் டிவில்லியர்ஸ். கோலிக்கு இன்று பெரிய ஷாட்டுகள் சரியாக கனெக்ட் ஆகவில்லை. களத்திற்கு வந்ததிலிருந்தே மெதுவாக ஆடியதுடன், பெரிய ஷாட் அடிக்க முடியாமல் திணறினார். கோலி 28 பந்தில் ஒரேயொரு பவுண்டரியுடன் 33 ரன்கள் மட்டுமே அடித்தார். கோலி அடிக்கவில்லையென்றாலும், டிவில்லியர்ஸ் அதிரடியாக ஆடி அதை ஈடுகட்டினார்.
undefined
click me!