ஐபிஎல் 2020: சிஎஸ்கே வீரர்களுக்கு ஸ்டீஃபன் ஃப்ளெமிங்கின் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!

First Published Oct 12, 2020, 7:26 PM IST

சிஎஸ்கே மிடில் ஆர்டர் வீரர்களுக்கு தலைமை பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் கண்டிப்புடன் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசனில் மும்பை இந்தியன்ஸ், கேகேஆர் அணிகளுடன், முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் இறங்கியுள்ள டெல்லி கேபிடள்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளும் சிறப்பாக ஆடி புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்திவருகின்றன.
undefined
ஆனால் ஆடிய அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்று, 8 முறை ஃபைனலுக்கு முன்னேறி, 3 முறை கோப்பையை வென்ற சிஎஸ்கே அணி, இந்த சீசனில் படுமோசமாக சொதப்பி தொடர் தோல்விகளை தழுவிவருகிறது.
undefined
இந்த சீசனில் சிஎஸ்கேவில் ரெய்னா ஆடாததால் மிடில் ஆர்டர் பிரச்னை பெரும் பிரச்னையாக உள்ளது. அதனால் தொடக்க வீரர்களான ஷேன் வாட்சன் மற்றும் டுப்ளெசிஸையே அதிகமாக சார்ந்திருக்கிறது சிஎஸ்கே அணி. அவர்கள் இருவரும் சொதப்பும்பட்சத்தில், சிஎஸ்கே தோல்வியை தழுவுகிறது.
undefined
கேகேஆருக்கு எதிரான போட்டியில் மிடில் ஆர்டர் சொதப்பலால் ஜெயிக்க வேண்டிய போட்டியில் தோற்ற சிஎஸ்கே, அடுத்த போட்டியில் ஆர்சிபி நிர்ணயித்த 170 ரன்கள் என்ற இலக்கை அடிக்க முடியாமல் 37 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
undefined
ராயுடு சூழலுக்கேற்ப ஆடாமல், ஏனோதானோவென ஆடுகிறார். ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் தமிழகத்தை சேர்ந்த ஜெகதீசன் நம்பிக்கையளித்தார். சிஎஸ்கே தோற்ற அனைத்து போட்டிகளிலுமே மிடில் ஓவர்களில் மந்தமாக ஆடியதால், டெத் ஓவர்களில் அழுத்தம் அதிகரித்ததன் விளைவாகத்தான், சிஎஸ்கே தோற்க நேர்ந்தது.
undefined
சிஎஸ்கே அணியின் பேட்டிங்தான் பெரும் கவலையளிக்கிறது என கேப்டன் தோனி தெரிவித்திருந்தார். இந்நிலையில், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிடில் ஓவர்களில் கணிசமாக ஸ்கோர் செய்ய வேண்டும் என தலைமை பயிற்சியாளர் ஃப்ளெமிங் தெரிவித்துள்ளார்.
undefined
"Most teams, when they are playing well, are getting run production from their first three or four batters. When you don't get that, it has been bits and pieces all the way through, which can make you look patchy, but obviously, performances like that cover up a lot of things," said Fleming during the post-match press meet.
undefined
click me!