ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. வழக்கம்போலவே இந்த சீசனிலும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கிய ஆர்சிபி அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்று வெற்றியுடன் இந்த சீசனை தொடங்கியுள்ளது.
நாளை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி ஆடுகிறது. முதல் போட்டியில் ஆடிராத ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ், பஞ்சாப்புக்கு எதிரான அடுத்த போட்டியிலும் ஆடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சீசனுக்கான ஏலத்தில் ஆரோன் ஃபின்ச், கிறிஸ் மோரிஸ் ஆகிய சிறந்த வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் எடுத்ததால், அணி காம்பினேஷன் இந்த முறை வலுவாக இருப்பதாக மிகுந்த நம்பிக்கையுடன் கேப்டன் கோலி கூறியிருந்தார்.
டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஆடிவந்த தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸை இந்த சீசனில் ரூ.10 கோடிக்கு எடுத்தது ஆர்சிபி அணி. அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து ஆல்ரவுண்டரான மோரிஸ், அணி காம்பினேஷனுக்கு வலுசேர்ப்பார் என்று எடுக்கப்பட்டார்.
ஆனால் இடுப்புப்பகுதியில் காயம் காரணமாக முதல் போட்டியில் ஆடாத மோரிஸ், இன்னும் முழு ஃபிட்னெஸை பெறவில்லை என்பதால், பஞ்சாப்புக்கு எதிரான போட்டியிலும் ஆடமாட்டார் என ஆர்சிபி அணி தெரிவித்துவிட்டது.