ஐபிஎல் 13வது சீசன் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், பல சவால்களை எதிர்கொண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. அடுத்த சீசனுக்கான ஏலம் பெரிய ஏலமாக நடக்கவுள்ளது.
மெகா ஏலமாக நடக்கும்பட்சத்தில், அனைத்து அணிகளும் வெறும் 2 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மிகக்குறைவான வீரர்களையே தக்கவைக்க முடியும். இந்நிலையில், சன்ரைசர்ஸ் அணி எந்தெந்த வீரர்களை தக்கவைக்கும் என்பது குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, டேவிட் வார்னர் மற்றும் ரஷீத் கான் ஆகிய இருவரையும் சன்ரைசர்ஸ் அணி கண்டிப்பாக தக்கவைக்க வேண்டும். ரஷீத் கான் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகிய இருவரையும் ஆர்டிஎம்(RIght To Match) கார்டை பயன்படுத்தி தக்கவைக்க வேண்டும்.
வில்லியம்சன், ஜேசன் ஹோல்டர், பேர்ஸ்டோ ஆகிய மூவரில் யாருக்கு முக்கியத்துவம் கொடுத்து தக்கவைக்கும் என்பது சன்ரைசர்ஸுக்கு கடும் சவாலாக இருக்கும். வெளிநாட்டு வீரர்களை எப்படி சன்ரைசர்ஸ் அணி மேனேஜ் செய்கிறது என்பதை பொறுத்தது.