ஐபிஎல் 2021: மாத்தியோசி.. அடுத்த சீசனுக்கான 2 அணிகளின் அதிரடி முடிவுகள்

First Published | Nov 18, 2020, 4:58 PM IST

சிஎஸ்கே மற்றும் கேகேஆர் ஆகிய இரு அணிகளுக்கும் அடுத்த சீசனுக்கான ஆலோசனையை அஜித் அகார்கர் வழங்கியுள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசன் சிஎஸ்கே அணிக்கு சரியானதாக அமையவில்லை. இந்த சீசனில் தான் முதல் முறையாக சிஎஸ்கே அணி, பிளே ஆஃபிற்கு முன்னேறாமல் வெளியேறியது. சீசனின் இடையே கேப்டனை மாற்றிய கேகேஆர் அணி 14 புள்ளிகளை பெற்றும், நெட் ரன்ரேட்டால், பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து லீக்குடன் வெளியேறியது.
அடுத்த சீசனுக்கு மெகா ஏலம் நடக்கவுள்ள நிலையில், மொத்த அணியையும் மறுகட்டமைப்பு செய்யும் முனைப்பில் உள்ளது சிஎஸ்கே அணி. கேகேஆர் அணியும் மோர்கன் தலைமையில் நல்ல கோர் டீமை கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
Tap to resize

இந்நிலையில், அந்த அணிகள் குறித்து பேசிய அகார்கர், 2 அணிகளுக்கு அடுத்த சீசனில் மிகப்பெரிய வேலை இருக்கிறது. சிஎஸ்கே அணி அணியையே மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அடுத்தது கேகேஆர் அணி.
கேகேஆர் அணி நன்றாகத்தான் ஆடியது. அந்த அணியில் நிறைய மேட்ச் வின்னர்கள் இருந்த நிலையில், இன்னும் சிறப்பாக ஆடியிருக்க வேண்டும். நல்ல நிலையில் இருந்தபோது, தேவையில்லாமல் சீசனின் இடையே கேப்டனை மாற்றியது, அந்த அணியின் கேம்ப்பில் ஏதோ பிரச்னை இருக்கிறது என்பதை உணர்த்தியது. டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக வெற்றி பெறுவது சாத்தியமற்றது. ஆனால் அதேவேளையில் அந்த அணியில் இருக்கும் சிறுசிறு பிரச்னைகளை கலைந்து சரியான கேப்டனை நியமித்து, தேவையில்லாத மாற்றங்களை செய்யாமல் இருந்தாலே போதும் என்று அகார்கர் தெரிவித்துள்ளார்.

Latest Videos

click me!