World Coconut Day 2025 : தேங்காய்க்கு இவ்வளவு சக்தியா? தாய்ப்பாலுக்கு சமமான சத்துக்கள்!! அவசியம் படிங்க

Published : Sep 02, 2025, 10:19 AM IST

தினமும் ஒரு துண்டு பச்சை தேங்காய் சாப்பிட்டு வந்தால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் அவை என்னென்ன என்பதை இங்கு காணலாம்.

PREV
18
World Coconut Day 2025

தேங்காயை சமையலுக்கு மட்டுமல்ல பல தேவைகளுக்காகவும் பயன்படுத்துகிறோம். தேங்காயில் தத்துவமான பல்வேறு நன்மைகள் நிறைந்துள்ளன. பச்சை தேங்காய் சாப்பிடுவது சுவையாக இருக்கும். ஆனால் அப்படி சாப்பிட்டால் உடலில் கொழுப்பு அதிகமாகிவிடும் என்று சிலர் அதை தவிர்த்து விடுகிறார்கள். ஆனால் உண்மையில் தேங்காயை சமையல் சேர்த்து சாப்பிடுவதை விட தினமும் ஒரு துண்டு அளவு பச்சை தேங்காயை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? அப்படி என்னென்ன நன்மைகள் தான் கிடைக்கும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

28
இரத்த அழுத்தம்

தேங்காயில் பொட்டாசியம் அதிகமாக உள்ளதால் இது உடலில் இருந்து அதிகப்படியான சோடியத்தை சிறுநீர் மூலம் வெளியேற்றிவிடும். மேலும் இதில் இருக்கும் சாச்சுரேட்டட் கொழுப்பானது இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவும். இதனால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

38
எலும்புகள் ஆரோக்கியம்

தினமும் ஒரு துண்டு பச்சை தேங்காய் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக தேங்காயில் இருக்கும் மாங்கனீசு உடலில் கால்சியத்தை முழுமையாக உறிஞ்ச உதவி செய்யும்.

48
ஆற்றல் கொடுக்கும்

தேங்காய் தண்ணீரில் மட்டுமல்ல தேங்காயிலும் எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன. மேலும் மீடியம் செயின் டிரைகிளிசரைடுகளும் இருக்கிறது. இவை உடலுக்கு தேவையான ஆற்றலை விரைவாக கொடுக்கும். முக்கியமாக தேங்காயில் இருக்கும் சாச்சுரேட்டட் கொழுப்பானது உடலில் ஆற்றலை நீண்ட நேரம் தக்க வைக்க உதவுகிறது.

58
நோயெதிர்ப்பு மண்டலம் பலப்படும்

பச்சை தேங்காயில் மாங்கனீசு மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன. அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த உதவுகிறது.

68
மறதி பிரச்சினை

அல்சைமர், டிமென்ஷியா பிரச்சனைகளை தடுப்பதற்கு தேங்காய் பெரிதும் உதவும். தினமும் ஒரு சின்ன துண்டு பச்சை தேங்காய் சாப்பிட்டு வந்தால் அதில் இருக்கும் பண்புகள் இந்த பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது.

78
மலச்சிக்கல்

தேங்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் அது மலச்சிக்கல் பிரச்சனையை போக்கி செரிமானத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. மேலும் குடல் இயக்கத்தையும் அதிகரிக்கும்.

88
சிவப்பு ரத்த அணுக்கள் அதிகமாகும்

தேங்காய் நில் தாமிரம் மற்றும் இரும்பு சத்து அதிகமாக உள்ளதால் அவை உடல் முழுவதும் ஆக்சிஜனை கொண்டு சென்று ரத்த சிவப்பு அணுக்களை உடலில் அதிகரிக்க செய்யும். தேங்காயில் அதிகமாக இருக்கும் செலினியம் உடலில் உள்ள ப்ரீ ரேடிக்கல்ஸ்களை எதிர்த்து போராடும்.

குறிப்பு : பச்சை தேங்காய் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கினாலும் அதை அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை கூடும். இதனால் இருதய பிரச்சனைகள் வரும். எனவே அளவோடு சாப்பிடுங்கள். முக்கியமாக பச்சை தேங்காய் சாப்பிடும் ஒரு முறை மருத்துவரை அணுகுவது நல்லது.

Read more Photos on
click me!

Recommended Stories