Walking
உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும், எடையைக் குறைக்கவும் உதவும் ஒரே மாத்திரை இருந்தால், அது ஒரு அதிசய மருந்தாக இருக்கும். அதுதான் நடைபயிற்சி. தினசரி நடவடிக்கையில் ஒன்றாக வாக்கிங்கையும் சேர்த்துக்கொண்டால் உடல்நலப் பிரச்சினைகள் பலவற்றைத் தவிர்க்கலாம்.
Benefits of Walking
நடைபயிற்சியால் ஏற்படும் நல்விளைவுகளைப் பற்றி பல ஆய்வுகள் தொடர்ந்து நிரூபித்துள்ளன. ஜர்னல் ஆஃப் அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் (JAMA) இல் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு, வாக்கிக் மூலம் 72 சதவீதம் பேருக்கு பல நோய்களின் அபாயம் குறைத்துள்ளதாகக் கூறுகிறது.
Walking daily
நடைபயிற்சியின் நன்மைகள்:
நடைபயிற்சி உணவு ஆற்றலை நமது தசை செல்களுக்கு கொண்டு செல்ல உதவுகிறது. அங்கு அது உடலுக்கு பயன்படுத்தக்கூடிய ஆற்றலாக மாற்றப்படுகிறது. இந்த செயல்முறை இல்லாமல் போனால், உணவு ஆற்றல் உடல் கொழுப்பில் குவிகிறது. இதனால் உடல் பருமன், நீரிழிவு, இதய பிரச்சினைகள் போன்ற நோய்களுக்குக் காரணமாகிறது.
வழக்கமாக நடைபயிற்சிக்குச் செல்வது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. தமனிகளின் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கிறது. நடையில் வேகம் முக்கியம் இல்லை. மெதுவாக நடப்பதை விட வேகமாக நடப்பதுதான் நல்லது என்று ஏதும் இல்லை. உங்கள் நடையின் வேகத்தை அதிகரிப்பதை அதிக தூரம் நடப்பதுதான் முக்கியம் என்று இந்த ஆய்வு கூறுகிறது.
8,000 steps Walking
யாருக்கு அதிக பயன்?
நடைபயிற்சி அனைவருக்கும் பயனளிக்கும். குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வாக்கிங் செல்வதால் அதிக பலன் உண்டு. வாரத்திற்கு மூன்று முதல் ஏழு முறை 8,000 அடி நடைபயிற்சி செய்வது இறப்பை ஒத்திப்போடும் வழி என்று ஜமாவின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
முதுமையில் ஆரோக்கியமாக இருப்பதற்கு இன்றியமையாத தேவையாக நடைபயிற்சி இருக்கும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. நடைப்பயிற்சியை தினசரி பழக்கமாக மாற்றிக்கொண்டால் விரைவிலேயே அதன் பலன் தெரியும்.
Walking as a routine
நடையை அதிகரிக்க எளிய வழிகள்:
அன்றாட நடவடிக்கைகளின் மூலமாகவே நடையை அதிகரிக்கலாம். தொலைபேசி அழைப்புகள் அல்லது சந்திப்புகளின்போது நடந்துகொண்டே பேசலாம். வேலை இடைவேளையின் போது சிறிது நேரம் நடக்கலாம். லிஃப்ட்களுக்குப் பதிலாக படிக்கட்டுகளில் செல்லலாம்.
உடல் எடையைக் குறைக்கவும் ஆரோக்கியத்திற்காகவும் சிக்கலான உடற்பயிற்சி, நம்பத்தகாத உணவு முறைகள் போன்றவற்றில் சிக்கிக் கொள்வதற்குப் பதிலாக நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் சிறிது தூரம் நடப்பது உங்கள் ஆரோக்கியமான வாழ்விற்கு அடித்தளமாக மாறும்.