இதய நோயாளிகள் தினமும் எத்தனை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்? மீறினால் என்ன நடக்கும்?

Published : Nov 10, 2024, 04:06 PM IST

உடல் ஆரோக்கியத்திற்கு அதிகம் தண்ணீர் குடிப்பது அவசியம் தான் என்றாலும் இதய நோயாளிகள் அதிக அளவில் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர்.

PREV
15
இதய நோயாளிகள் தினமும் எத்தனை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்? மீறினால் என்ன நடக்கும்?
heart patient diet

நமது உடலை எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். அதிகமாக தண்ணீர் குடிப்பதால் மனநிலை மேம்படுவதோடு எடை இழப்புக்கும் பெரிதும் உதவுகிறது. எனவே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பெரும்பாலானோர் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று பலரும் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் தற்போது அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பது உடலுக்கு பிரச்சினையை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

25
Drinking Water

இயல்பான உடல்நிலையோடு உள்ள நபர் ஒருவர் நாள் முழுவதும் 3 - 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அதேநேரம் போதிய அளவில் தண்ணீர் குடிக்காவிட்டால் உடலில் தண்ணீர் சத்து குறைந்து கடுமையான பின்விலைவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் கடுமையான வயிறு தொடர்பான பிரச்சினை ஏற்படலாம்.

35
Drinking Water

இந்நிலையில் இதய நோயாளிகள் அதிகம் தண்ணீர் குடிப்பது பிரச்சினையை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதய நோயாளிகளின் உடலில் தாதுக்களின் சமநிலையை பராமரிப்பது மிகவும் முக்கியமான ஒன்று. இதய நோயாளிகள் அதிகம் தண்ணீர் குடிப்பதால் இதய துடிப்பை அதிகரிக்கிறது மற்றும் இதய நோயாளிகளுக்கு மாரடைப்பு, இதய அடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. மேலும் அதிகம் தண்ணீர் குடிப்பதால் சிறுநீரகத்தில் அழுத்தம் அதிகரிக்கிறது. மேலும் இதய நோயாளிகள் அதிகம் தண்ணீர் குடிப்பதால் இதயம் பலவீனமடைய வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

45
Drinking Water

அதன்படி இதய நோயாளிகள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2 லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிக்கக் கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால் இதய பாதிப்பு ஆரம்ப நிலையில் இருந்தா, நோய் பாதிப்பு குறைவாக உள்ள நபர்கள் வழக்கம் போல தண்ணீர் குடிக்கலாம். அதற்கு எந்த தடையும் கிடையாது. பாதிப்பு அதிகம் உள்ள நபர்கள் நாள் ஒன்றுக்கு 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது நல்லது.

55
Drinking Water

இதயம் பாதிக்கப்பட்ட நபர்கள் கண்டிப்பாக புகைபிடிக்கவோ, மது அருந்தவோ கூடாது. உணவில் உப்பு, எண்ணையின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து உடல் ஆரோக்கியத்திற்காக எளிமையான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவை மட்டுமே உட்கொல்ல வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories