காலை எழுந்ததும் 'டீ' குடிப்பவர்கள் தெரியாமல் பண்ற விஷயம்.. உடனே மாத்துங்க!!

Published : Feb 20, 2025, 09:50 AM ISTUpdated : Feb 20, 2025, 09:55 AM IST

Tea On An Empty Stomach Side Effects : வெறும் வயிற்றில் டீ ஏன் குடிக்க கூடாது என்பதற்கான காரணங்கள் இங்கே.

PREV
15
காலை எழுந்ததும் 'டீ' குடிப்பவர்கள் தெரியாமல் பண்ற விஷயம்.. உடனே மாத்துங்க!!
காலை எழுந்ததும் 'டீ' குடிப்பவர்கள் தெரியாமல் பண்ற விஷயம்.. உடனே மாத்துங்க!!

'டீ' பலரும் காலை விரும்பி குடிக்கும் பானமாகும். இந்தியாவில் டீ குடிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். பெரும்பாலானோர் தங்களது நாளை ஒரு கப் டீயுடன் தான் தொடங்க விரும்புகிறார்கள் அதே வேலை சிலர் நாள் முழுவதும் பழக்கம் டீ குடிக்கிறார்கள். அதுபோல சிலருக்கு காபி குடிக்கும் பழக்கம் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் தங்களது நாளை ஒரு கப் காபியுடன் தொடங்குகிறார்கள். இருப்பினும், அதிகமாக டீ மற்றும் காபி குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இது உடலில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் சொல்லுகின்றனர்.

25
வெறும் வயிற்றில் டீ குடிக்கலாமா?

நிபுணர்களின் கூற்றுப்படி டீ மற்றும் காபியில் காஃபின் உள்ளது  எனவே குறைந்த அளவில் டீ, காபியை குடிக்க வேண்டுமென்று அறிவுறுத்துகிறார்கள் அதே நேரத்தில் இரவு தூங்கும் முன் டீ, காபி குடிக்கவே கூடாது. இதனால் இரவு உங்களால் சரியாக தூங்க முடியாமல் போகும். இது தவிர, காலையில் வெறும் வயிற்றிலும் டீ குடிக்க கூடாது. எனினும், டீ குடிப்பதற்கு ஒரு நேரமும், விதியும் இருக்கிறது. இது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். ஆனால் பலர் காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பதை விரும்புகிறார்கள். இப்போது வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றி இங்கு பார்க்கலாம்.

இதையும் படிங்க:  சர்க்கரை நோயாளிகள் பால் டீ அருந்தலாமா? எப்போது குடித்தால் சர்க்கரை அளவு நார்மலாக இருக்கும் தெரியுமா?

35
சோர்வு மற்றும் எரிச்சல்:

காலையில் வெறும் வயிற்றில் டீ குடித்தால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும் என்று பல நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு. அதற்கு மாறாக இந்த நாள் முழுவதும் சோர்வாகவோ இருப்பீர்கள் மற்றும் எரிச்சல் ஏற்படும்.

அல்சர் வரும்:

காலையில் வெறும் வயிற்றில் டீ குடித்தால் குமட்டல் ஏற்படும். இது தவிர அல்சர் வர வாய்ப்பு உள்ளது. இதனால் தான் வெறும் வயிற்றில் டீ குடிக்க கூடாது என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க:  எப்போதும் டீ குடிச்சுட்டு தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவரா? அப்ப இதைத் தெரிஞ்சுகோங்க!

45
செரிமான அமைப்பு பாதிக்கப்படும்:

வெறும் வயிற்றில் டீ குடிப்பதினால் வயிற்றில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் பாதிக்கப்படுவதால், செரிமான அமைப்பு சரியாக செயல்பட முடியாமல் போய்விடும். எனவே வெறும் வயிற்றில் டீ குடிப்பதை நிறுத்தி விடுங்கள்.

சிறுநீர் பிரச்சனை:

வெறும் வயிற்றில் டீ குடித்தால் சிறுநீர் பிரச்சனை ஏற்படும். ஏனெனில் டீயில் இருக்கும் டையூரிடிக் சிறுநீர் கழிக்கும் செயல்முறையை துரிதப்படுத்தும். இதனால் உடலில் நீரிழப்பு ஏற்படும்.

55
வயிற்று பிரச்சனைகள்:

காலையில் வெறும் வயிற்றில் டீ குடித்தால் வயிற்று பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இது தவிர அசிடிட்டி, வாய் துர்நாற்றம் போன்றவையும் ஏற்படும்.

பிற விளைவுகள்:

காலையில் வெறும் வயிற்றில் டீ குடித்தால் உடலில் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சுவது தடுக்கப்படும். இதனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகும். பற்கள் சேதமடையும், நெஞ்செரிச்சல் ஏற்படும் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை பாதிக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories