Published : Feb 20, 2025, 08:11 AM ISTUpdated : Feb 20, 2025, 08:15 AM IST
Exercise on an Empty Stomach : காலையில் சாப்பிடும் முன்பு வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வதால் உடல் எடை அதிகளவில் குறையுமா? என்பது குறித்து காண்போம்.
வெறும் வயிற்றில் உடற்பயிற்சி.. கூடுதலாக உடல் எடையை குறைக்குமா?
காலை உணவை தவிர்ப்பது உடலுக்கு நல்லதல்ல. எப்போதும் காலையில் கண்டிப்பாக சாப்பிட வேண்டும். சாப்பிடாமல் இருப்பது தவறு. ஆனால் காலையில் சாப்பிடுவதற்கு முன்பாக உடற்பயிற்சி செய்வது எடை குறைப்புக்கு உதவும் என பரவலாக நம்பப்படுகிறது. செரிப்பதற்கு எளிமையான காலை உணவை சாப்பிட்டு தெம்பாக உடற்பயிற்சி செய்வது உடலுக்கு போதுமான ஆற்றலை தரும் எனவும் சொல்லப்படுகிறது. இந்த பதிவில் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வது கூடுதலாக எடையை குறைக்க உதவுகிறதா? என்பது குறித்து விரிவாக காணலாம்.
25
வெறும் வயிற்றில் உடற்பயிற்சி
வெறும் வயிற்றில் உடற்பயிற்சி மேற்கொள்வதை ஃபாஸ்டெட் கார்டியோ (Fasted cardio) என்கிறார்கள். நீங்கள் சாப்பிடாமல் உடற்பயிற்சி செய்வதால் உடலில் ஏற்கனவே சேமிக்கப்படிருக்கும் கொழுப்பு, கார்போஹைட்ரேட்டுகள் ஆற்றலுக்காக எடுத்துக் கொள்ளப்படும். இதனால் கொழுப்பு விரைவில் குறையும்.
கடந்த 2016இல் செய்யப்பட்ட ஆய்வில் வெறும் வயிற்றில் எடை குறைப்பாக உடற்பயிற்சி செய்தவர்களுக்கு கிடைத்த நன்மைகள் ஆராயப்பட்டது. இதில் 12 ஆண்கள் கலந்துகொண்டனர். உடற்பயிற்சி செய்யும் முன் காலை உணவை உண்ணாதவர்களுடைய உடலில் கொழுப்பு அதிகமாக எரிக்கப்பட்டு அதிக கலோரிகள் குறைந்துள்ளன. இது எடையிழப்புக்கு அவசியமானது. ஆனால் சில ஆராய்ச்சிகள் இதனை மறுக்கவும் செய்துள்ளன. இதே மாதிரி 2014இல் 20 பெண்களிடம் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வதால் குறிப்பிடத்தக்க எந்த மாற்றமும் நிகழவில்லை. தொடர்ச்சியாக 4 வாரங்களில் ஆய்வில் பங்கேற்ற இருகுழுவினருக்கும் உடல் எடை, கொழுப்பு சதவீதம், இடுப்பு சுற்றளவு போன்றவை அளவிடப்பட்டது. அவை குறைந்துள்ளன. வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வதால் உடலில் உள்ள புரதம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதனால் உடற்பயிற்சி செய்பவர்கள் புரத உணவினை எடுத்து கொள்ள வேண்டும். உடற்பயிற்சிக்குப் பின் தசைகள் வலுவாக இது காரணமாகிறது.
45
வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யலாமா?
வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யலாம் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதற்காக அவை சிறந்தது என்று சொல்லிவிட முடியாது. வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வதால் உடலில் உள்ள அனைத்து ஆற்றலும் சகிப்புத்தன்மை குறையலாம். உங்களுடைய இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதால் தலைச்சுற்றல், குமட்டல், பதற்றம், நடுக்கம் ஆகியவை வரலாம். குறிப்பாக தொடர்ந்து உங்களுடைய உடல் கொழுப்பை எரித்து பயன்படுத்துவதை விடுத்து வழக்கத்தை விட அதிக கொழுப்பை சேமிக்கலாம்.
உடற்பயிற்சி செய்யும் முன்பு மிதமான உணவுகளை உண்ணலாம். கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், கொழுப்புகள் ஆகியவை காணப்படும் எளிதில் ஜீரணமாகும் உணவை சாப்பிடலாம். வாழைப்பழம், பழச்சாறு, தயிருடன் காய்கறிகள் கலந்த சாலட், இட்லி போன்ற செரிப்பதற்கு எளிமையான மிதமான உணவுகளை உண்ணலாம். உடற்பயிற்சிக்கு செய்ய தயாரானால் 2 முதல் 3 மணி நேரத்திற்கு முன்பு சாப்பிடுங்கள். உடற்பயிற்சி செய்யும் முன், செய்த பின்னர் நன்கு தண்ணீர் குடியுங்கள். எலக்ட்ரோலைட் பானங்கள், பழச்சாறு குடித்து நீரேற்றமாக உடலை வைத்து கொள்ளுங்கள்.