மக்கானா என்ற தாமரை விதைகள்.. பிரதமர் மோடி விரும்பி உண்ணக் காரணம் இதுதான்!! 

Published : Feb 26, 2025, 04:16 PM IST

Makhana Health Benefits : ஒரு ஆண்டில் கிட்டத்தட்ட 300 நாட்கள் கூட மக்கானா எனும் தாமரை விதைகளை பிரதமர் மோடி விரும்பி சாப்பிடுவாராம்.  

PREV
15
மக்கானா என்ற தாமரை விதைகள்.. பிரதமர் மோடி விரும்பி உண்ணக் காரணம் இதுதான்!! 
மக்கானா என்ற தாமரை விதைகள்.. பிரதமர் மோடி விரும்பி உண்ணக் காரணம் இதுதான்!!

மக்கானா என்று அழைக்கப்படும் தாமரை விதை உடலுக்கு பல்வேறு நன்மைகளை செய்யக் கூடியது.  இந்த சத்தான விதைகளை பிரதமர் மோடியும் விரும்பி சாப்பிடுகிறாராம். அண்மையில் பாகல்பூரில் நடந்த பேரணியில் பிரதமர் மோடி பேசும்போது ஆண்டுக்கு குறைந்தபட்சம் 300 நாட்கள் மக்கானா உண்பதாக குறிப்பிட்டார்.  அதிலும் அதனை சிறந்த உணவு என்றும், உலக சந்தைகளுக்கு அதை கொண்டு செல்ல வேண்டும் என்றும் பேசினார். இதன் காரணமாகவே இந்தாண்டு பட்ஜெட்டில், மக்கானா விவசாயிகளின் நலன் கருதி அதற்கென வாரியத்தை அமைப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார். பொதுவாகவே உடலுக்கு உலர் பழங்கள், கொட்டைகள் நல்லது. அதில் மக்கானாவும் குறிப்பிடத்தக்கது. நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியும் மக்கானா ஆரோக்கியத்திற்கு  நல்லது என கூறியுள்ளார். இந்த பதிவில் மக்கானாவையும், அதன் நன்மைகளையும் தெரிந்து கொள்வோம்

25
மக்கானா சிறப்பம்சம்:

மக்கானா இன்று புதிதாக கொண்டுவரப்பட்ட உணவு அல்லது. அது பல நூற்றாண்டுகளாகவே உண்ணப்பட்டு வருகிறது. முன்னோர் உடலின் உறுதியை மேம்படுத்த மக்கானா சாப்பிட்டனர். அதாவது வேறு உணவுகளை உண்ணாமல் விரதம் இருந்தால் கூட மக்கானா மட்டும் சாப்பிட்டால் உடல் வலிமை அதிகரிக்கும்.  உடல் பலவீனமாக இருப்பவர்களுக்கு மக்கானா, பால் கொடுப்பது உடலை பராமரிக்க உதவும்.  

35
மக்கானா ஊட்டச்சத்துக்கள்:

இந்த விதைகள் பார்க்க சிறியதாக இருக்கும். ஆனால்  ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. வைட்டமின் ஏ, பி1, சி போன்றவை உள்ளன.  நாள்தோறும் அளவாக மக்கானா உண்பதால் உடல்  ஆரோக்கியத்தை மேம்படும். ஏனென்றால் இதில் புரதச்சத்து, நார்ச்சத்து அதிகம் உள்ளது.  மெக்னீசியம், பொட்டாசியம் உள்ளிட்ட தாதுக்களும் காணப்படுகின்றன. இதில் உள்ள பொட்டாசியம் உடலில் உள்ள தசைகளை வலுவாக்கும். கொழுப்பை சமநிலையில் வைக்க உதவுகிறது. இதனால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. மக்கானாவில் உள்ள காலிக் அமிலம், குளோரோஜெனிக் அமிலம், எபிகாடெசின் போன்றவை செல் சேதம் உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கின்றன. 

இதையும் படிங்க:  கொழுப்பை குறைக்கும் மக்கானா; ஆனா அதை சாப்பிட சரியான வழி எது?

45
மக்கானா எப்படி உண்ணலாம்?

மக்கானா சின்ன பசிக்கு நல்ல சிற்றுண்டி. இதனை எண்ணெய் அல்லது நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் மிளகு, சீரகத் தூள் உள்ளிட்ட மசாலாப் பொருட்களை கலந்து தேவையான அளவு உப்பிட்டு உண்ணலாம். இந்த முறையில் உண்ண விரும்பாவிட்டால் பாலுடன் மக்கானா பொடியை கலந்து அருந்தலாம். 

இதையும் படிங்க: Makhana : காலையில் வெறும் வயிற்றில் மக்கானா சாப்பிடுங்க.. 'Slim' ஆகுவது உறுதி!

55
மக்கானா நன்மைகள்:

- மக்கானா எனும் தாமரை விதையில் நிறைவுற்ற கொழுப்பு, சோடியம், கொலஸ்ட்ரால் போன்றவை குறைவு. இதை உண்பதால் எடை அதிகரிக்காது. சின்ன பசிக்கு நல்ல தேர்வாகும்.

- மக்கானாவில் உள்ள நார்ச்சத்து நீங்கள் விரதம் இருக்கும் போது ஆற்றலை அதிகரிக்க நல்ல உணவாகும். 

- இந்த விதைகளில் உள்ள கால்சியம் எலும்புகளுக்கு நல்லது. 

- உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏற்றது. 

- மக்கானா சாப்பிட்டால் டைப்-2 நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு குறைவு. ஏனெனில் இந்த விதைகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கும். 

- மக்கானா உண்பவர்களுக்கு இதய நோய், புற்றுநோய் ஆகிய உயிர்க்கொல்லி நோய் அபாயங்கள் குறைகின்றன.  

- உணவு செரிமானத்தை மேம்பட உதவுகிறது. சரும ஆரோக்கியத்திற்கு மக்கானா நல்ல பலன்களை தரும். 

- சிறுநீரகத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.  

- மக்கானா விதைகளில் உள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தருவதால் பசி எடுக்காது. எடை குறைக்க நினைப்பவர்கள் உண்பது நல்ல பலனை தரும். 

இத்தனை நன்மைகளை கொண்டுள்ள மக்கானா விதைகளை பிரதமர் மோடியும் விரும்பி உண்பதில் ஆச்சர்யமில்லை.

Read more Photos on
click me!

Recommended Stories