Healthy Habits After Eating Oily Food : எண்ணெய் உணவுகளை நீங்கள் அதிகமாக சாப்பிட்டுவிட்டால் சில விஷயங்களை பின்பற்றுவதன் மூலம் உங்களது உடலில் எந்த பாதிப்பும் ஏற்படாது.
எண்ணெய் உணவுகளை அதிகமா சாப்டிங்களா? இந்த '2' விஷங்களை உடனே செய்ங்க உடலுக்கு பிரச்சினை வராது!
நாம் சாப்பிடும் உணவு எது ஆரோக்கியத்திற்கு நல்லது எது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதை குறித்து நாம் கவலைப்படுவதில்லை. அதுவும் இளம் பருவத்தில் இதுகுறித்து கண்டுக்கவே மாட்டோம். ஆனால் வயதாகும் போது தான் உணவில் ரொம்பவே கவனம் செலுத்தத் தொடங்குவோம். காரணம் வயது ஆக ஆக உடலில் பல பிரச்சனைகள் ஏற்படத் தொடங்கும். அந்த வகையில், அதிக கொழுப்புள்ள உணவுகள் அதாவது, எண்ணெய் உணவுகள் அல்லது குப்பை உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் பல உடல்நிலை பிரச்சினை ஏற்படும்.
25
கொலஸ்ட்ரால் வர காரணம்:
கொலஸ்ட்ரால், கல்லீரலில் உற்பத்தியாகும் ஒரு விதமான கொழுப்பு அமிலம். இது மோசமானது அல்ல. ஆனால் அளவுக்கு அதிகமாக இருந்தால்தான் இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். உடலில் இருக்கும் கொழுப்பை அளவை குறைக்க சிறப்பு கவனம் செலுத்துவது ரொம்பவே முக்கியமான விஷயம். இதற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கத்தை பின்பற்ற வேண்டும். இத்தகைய சூழ்நிலையில், கொழுப்பின் அளவை அதிகரிக்கும் எண்ணெய் மற்றும் குப்பை உணவுகளை சாப்பிட்டால் அதை குறைக்க இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களை பின்பற்றுங்கள். உடலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது.
35
உடற்பயிற்சி
எண்ணெய் உணவுகள் அல்லது கொழுப்பு உணவுகளை அதிகமாக சாப்பிட்ட உடனே தீவிர உடற்பயிற்சி செய்ய வேண்டாம். மாறாக சிறிது தூரம் நடந்தால் மட்டும் போதும். இதனால் கல்லோரிகள் எரிக்கப்படும் மற்றும் கொழுப்புகள் உடலில் தாங்காது.
எண்ணெய் நிறைந்த உணவுகளை சாப்பிட்ட சிறிது நேரம் கழித்து 1-2 கிளாஸ் சூடான நீரை குடியுங்கள். சூடான நீர் எண்ணெய் உணவுகளை விரைவில் வெளியேற்றிவிடும். அது மட்டுமில்லாமல் வயிறு, குடல் மற்றும் கல்லீரலை சேதத்திலிலிருந்து பாதுகாத்து, ஆரோக்கியமாக வைக்க உதவும்.
- நீங்கள் சாப்பிட்ட உடனே தூங்கினால் உடலில் கொழுப்பு சேர ஆரம்பிக்கும். எனவே சாப்பிட்ட பிறகு சுமார் 2-3 கழித்துதான் தூங்க வேண்டும்.
- எண்ணெய் உணவுகளை சாப்பிட்ட பிறகு ஜில் வாட்டர் குடிக்கும் பழக்கம் இருந்தால் உடனே அதை நிறுத்தி விடுங்கள். ஏனெனில், எந்தவொரு எண்ணெய் உணவுகளையும் சாப்பிட்ட பிறகு ஐஸ்கிரீம் போன்ற கூலான உணவுகளையும் சாப்பிடக்கூடாது. அப்படி மீறி சாப்பிட்டால், அதனால் கல்லீரல், வயிறு மற்றும் குடல்தான் பாதிக்கப்படும். எனவே நீங்கள் அதிக உணவு சாப்பிட்ட பிறகு ஒருபோதும் குளிர்ந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்.