வாக்கிங் போகாமல் வெறும் '15' நிமிடங்கள் இதை செய்தால் எடை தானாக குறையும்!!
எடையை குறைக்க மட்டுமின்றி பல்வேறு உடல் நல பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சிறந்த பயிற்சி நடைபயிற்சி. அதைப் போலவே படிக்கட்டுகளில் ஏறுதலும் பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளன. இந்தப் பதிவில் படிக்கட்டுகளில் ஏறுவது அல்லது நடைபயிற்சி எதில் அதிக கலோரிகள் எரிக்கப்பட்டு எடை குறையும் என்பதை காணலாம்.
26
படிக்கட்டு ஏறுதல் vs நடைபயிற்சி
வெறும் உடற்பயிற்சிகளில் எடையை குறைக்க முடியாது. நீங்கள் சரியான உணவு பழக்கத்தை கொண்டிருக்க வேண்டும். உதாரணமாக நீங்கள் உங்கள் அன்றாட வாழ்வில் வெள்ளை சர்க்கரை பண்டங்களை, காபி அல்லது டீ குடிப்பதை விட்டுவிட்டால் உடலில் பெரிய மாற்றங்கள் தெரியும். கூடவே நடைபயிற்சி செய்தால் அதிக உடல் எடையை குறைக்கலாம். ஆனால் நடைபயிற்சியை விடவும் படிக்கட்டுகளில் ஏறும் பயிற்சி அதிக கலோரிகளை எரிக்கும் என்பதை நீங்கள் அறிவீர்களா? இரண்டின் நன்மைகளை தெரிந்து கொண்டு முடிவு செய்யுங்கள்.
36
படிக்கட்டுகளில் ஏறும் பயிற்சி;
நடைபயிற்சியை விட விரைவில் கலோரிகளை எரிக்க படிக்கட்டுகளில் ஏறுவது உதவும். நாம் படிக்கட்டுகளில் ஏறும்போது உடலானது புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக செயல்படும். இதனால் நடப்பதை காட்டிலும் அதிக ஆற்றலை செலவிடுவோம். ஆற்றல் அதிகம் பயன்படுத்தப்படும்போது வளர்சிதை மாற்றம் அதிகரித்து கூடுதல் கலோரிகள் எரிக்கப்படுகின்றன. இதனால் எடை குறைகிறது.
46
உங்களுக்கு தெரியுமா?
ஒரு நாளில் குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் படியேறினால் கூட அது 45 நிமிட சுறுசுறுப்பாக நடந்ததற்கு இணையான பலன்களை தரும்.
வாக்கிங் போகும்போது உடல் உடல் கிடைமட்ட இயக்கத்தை கொண்டிருக்கும். மிதமான ஆற்றலுடன் நடந்தால் போதுமானது. நீங்கள் எடையை குறைக்க வேண்டுமென்றால் விறுவிறுப்பான நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதுவும் 30 நிமிடங்களுக்கு விறுவிறுப்பாக நடந்தால் தான் குறிப்பிட்ட பலன்களை அடையலாம். ஆனால் படியேறும் போது குறைந்த நிமிடங்களில் அதிக ஆற்றல் பயன்படுத்தப்பட்டு அதிக கலோரிகள் எரிக்கப்படுகின்றன.