அக்குளில் கருமை நீங்க 'கற்றாழை' ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க.!!

Published : Feb 25, 2025, 03:17 PM ISTUpdated : Feb 25, 2025, 03:20 PM IST

Aloe Vera Gel For Dark Underarms : அக்குள் கருமையை நீக்குவதில் கற்றாழை ஜெல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இங்கு காணலாம்.

PREV
16
அக்குளில் கருமை நீங்க 'கற்றாழை' ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க.!!
அக்குளில் கருமை நீங்க 'கற்றாழை' ஜெல்லை எப்படி யூஸ் பண்ணுங்க.!!

பலரும் அக்குள் கருப்பாக இருப்பதால் ரொம்பவே அவதிப்படுகிறார்கள். மேலும் சங்கடமாகவும் உணர்கிறார்கள். இதனால் கைகளை கூட உயர்த்துவதில் வெட்கப்படுகிறார்கள். முக்கியமாக அக்குள் கருமையாக இருப்பதால் பெண்கள் ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அணிய முடியாமல் போகிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதாவது ஹார்மோன மாற்றங்கள், வியர்வை, சருமத்தில் ஒவ்வாமை, முடி அகற்றுவதற்கு ரேஸர் மற்றும் கிரீம் பயன்பாடு அல்லது அதிகப்படியான டியோடரண்டின் பயன்படுத்துதல் போன்ற காரணத்தினால் தான் அக்குள் கருமையாக இருக்கிறது. 

26
அக்குளில் கருமை நீங்க

அக்குள் போக்க பலவிதமான பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவை எந்தவிதமான பலனையும் தருவதில்லை. இத்தகைய சூழ்நிலையில், கற்றாழை ஜெல் உங்களுக்கு பெரிதும் உதவும். கற்றழை ஜெல் அக்குளில் இருக்கும் கருமையை எளிதாக நீக்கும். கற்றாழியில் இருக்கும் பண்புகள் சருமத்தில் உள்ள கறைகள் மற்றும் கரும்புள்ளிகளை போக்க பெரிதும் உதவுகிறது மற்றும் சருமத்தை நிறத்தை மேம்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி இப்போது அக்குள் கருமையை போக்க கற்றாழை ஜெல்லை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

36
கற்றாழை ஜெல் மற்றும் ரோஸ் வாட்டர்:

அக்குள் கருமையை போக்க கற்றாழை ஜெல்லுடன் ரோஸ் வாட்டர் கலந்து அதை அதை அக்குளில் தடவி 30 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு தண்ணீரால் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

46
கற்றாழை ஜெல் மற்றும் எலுமிச்சை சாறு:

எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளன இது சருமத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை போக்கவும் , நிறத்தை மேம்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. அதேபோல கற்றாழை சருமத்தை மென்மையாகவும், பளபளபாகவும் மாற்றும். எனவே 2 ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து அதை அக்குளில் தடவி சிறிது நேரம் அப்படியே வைத்துவிட்டு பிறகு தண்ணீரால் கழுவ வேண்டும் இந்த டிப்ஸை நீங்கள் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தலாம்.

இதையும் படிங்க:  ஒரே வாரத்தில் அக்குள் கருமையை போக்க சுலபமான வழிகள் இதோ.. கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!!

56
கற்றாழை ஜெல் மற்றும் மஞ்சள்:

மஞ்சளில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு, ஆக்சிஜனேற்றம் மற்றும் கிருமி நாசினி பண்புகள் சருமத்தில் இருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்யவும், சரும கருமையை போக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே 2 ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து அதை அங்குளில் தடவி 15 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு பிறகு தண்ணீரில் கழுவ வேண்டும். நீங்கள் இந்த முறையை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தலாம்.

இதையும் படிங்க:  அக்குள் கருப்பா அசிங்கமா இருக்கா.. தயிர் மட்டும் போதும்.. வெறும் 5 நிமிடங்களில் மாறும் அதிசயம்

66
கற்றாழை ஜெல் மற்றும் அரிசி மாவு:

அரிசி மாவு சருமத்தை உரிக்க உதவும். மற்றும் சருமத்தில் இருக்கும் அழுக்குகள், கருமையை நீக்க உதவுகிறது. இதற்கு 2 ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், 2 ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து நன்றாக கலந்து அதை அக்குளில் தடவி 15 நிமிடம் கழித்து சூடான நீரில் கழுவ வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories