கருமை இல்லாத பளபள முகத்திற்கு வாழைப்பழத் தோலை எப்படி யூஸ் பண்ணனும்?
பொதுவாக ஒவ்வொரு பெண்களும் தங்களது முகம் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இதற்காக அவர்கள் பலவிதமான பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள். அதுமட்டுமல்லாமல் சில பெண்கள் தங்களது முகத்திற்கு பளபளப்பை கொண்டு வர விலையுயர்ந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதனால் எந்த பயனும் அவர்கள் பெறுவதில்லை. ஆனால் இப்படி எந்தவித பொருட்களும் பயன்படுத்தாமல், பணத்தையும் வீணடிக்காமல் இயற்கை முறையில் முகத்திற்கு பளபளப்பை கொண்டு வரலாம் தெரியுமா? ஆம், உங்களது முகத்தில் பளபளப்பை கொண்டு வர நீங்கள் விரும்பினால் வாழைப்பழ தோலை பயன்படுத்தலாம்.
25
கறைகளைப் போக்கும்:
வாழைப்பழத் தோல் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அதை கொண்டு உங்களது முகத்தை அழகாக மாற்றலாம். இதற்கு வாழைப்பழத் தோலில் உட்பகுதியை உங்களது முகத்தில் தடவி பிறகு லேசாக மசாஜ் செய்ய வேண்டும். பின் குறைந்தது ஐந்து நிமிடங்கள் கழித்து அப்படியே வைத்து விட்டு, பிறகு குளிர்ந்த நீரில் உங்களது முகத்தை சுத்தம் செய்யவும். தினமும் இரவு தூங்கு முன் இந்த முறையை நீங்கள் செய்து வந்தால் முகத்தில் படிந்திருக்கும் இறந்த சருமம் அகற்றிவிடும்.
35
பருக்களை போக்கும்:
உங்களது முகத்தில் பருக்கள் அல்லது கரும்புள்ளிகள் அதிகமாக இருந்தால் அவற்றை போக்குவதற்கு வாழைப்பழ தோல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு ஒரு வாழைப்பழத் தோலை நன்றாக அரைத்து அதனுடன் தயிர் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்க்கவும். பிறகு அந்த பேஸ்ட் உங்களது முகத்தில் தடவவும். இது உங்களது சருமத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் பருக்களை நீக்குவது மட்டுமல்லாமல், முகத்தை பளபளப்பாகவும் மாற்றும்.
வாழைப்பழ தோல் ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளதால், இது உங்களது சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கும் மற்றும் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்கும். வாழைப்பழ தோல் சருமத்தில் கொலாஜனை அதிகரிப்பதிலும், ஈரப்பதமூட்டுவதிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு வாழைப்பழ தோல் பேஸ் உடன் வைட்டமின் ஈ காப்ஸ்யூல், முல்தானி மட்டி மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை கலந்து முகத்தில் பயன்படுத்த வேண்டும்.
வாழைப்பழத் தோலை மிக்ஸியில் அரைத்து அதை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் சிறிதளவு தேன் சேர்த்து நன்றாக கலந்து அந்த பேஸ்டை உங்களது முகத்தில் தடவி சுமார் பத்து நிமிடம் அப்படியே வைத்து விட்டு பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்: போடும் முன் உங்களது முகத்தை கழுவி சுத்தம் செய்து பிறகு தான் போட வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
வேண்டும்.