பெண்களை விட ஆண்கள் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் ஏன் தெரியுமா?

Published : Feb 14, 2025, 02:50 PM IST

Men's Hydration Needs : பெண்களை விட ஆண்கள் ஏன் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் இங்கே.

PREV
15
பெண்களை விட ஆண்கள் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் ஏன் தெரியுமா?
பெண்களை விட ஆண்கள் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் ஏன் தெரியுமா?

நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்க நிறைய தண்ணீர் குடிப்பது ரொம்பவே முக்கியம் .தண்ணீர் குடிப்பதன் மூலம் நீரிழப்பை தடுப்பது மட்டுமல்லாமல், உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் சரியாக செயல்பட உதவும். எனவே ஒவ்வொருவரும் தங்களது தேவைக்கேற்ப தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆனால் ஆண்கள் பெண்களை விட ரொம்பவே அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். அது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா? மற்றும் ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

25
தண்ணீர் குடிப்பதன் நன்மைகள்:

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கும். மேலும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் உடலில் ஒவ்வொரு பகுதிக்கும் சரியாக வழங்கப்படும். அதுமட்டுமில்லாமல் நீரிழப்பு தடுக்கப்படும், சருமமும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் சிறுநீர் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு குறையும். தண்ணீர் குடிப்பதன் மூலம் மூட்டு வலியை போக்கிவிடலாம். 

35
ஆண்கள் ஏன் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்?

ஆய்வு ஒன்றின் படி, ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 3.7 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும். நீங்கள் உங்களது உடலை நீரேற்றமாக வைக்க தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டிய அவசியமில்லை. அதற்கு பதிலாக நீர்ச்சத்து உள்ள பழங்கள், காய்கறிளை சாப்பிடலாம். நிபுணர்களின் கூற்றுப்படி, ஒவ்வொரு நாளும் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் ஆண்கள் தங்களது உடலின் வெப்பநிலையை சரியாக பராமரிக்க முடியும். இதனால் ரத்த அழுகை மேம்படும், உடற்பயிற்சி செயல்திறனை மேம்படுத்தலாம், நீரிழிப்பு போன்ற பிரச்சனைகளை போக்க முடியும்.

இதையும் படிங்க:   ஆண்களே.. நீங்க இளமையாக இருக்க ஆசைப்படுறீங்களா? அப்ப முதல்ல 'இத' படிங்க..

45
ஆண்களுக்கு ஏன் அதிக தண்ணீர் தேவை?

நிபுணர்களின் கூற்றுப்படி பெண்களை விட ஆண்கள்தான் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனென்றால் ஆண்களுக்கு அதிக உடல்நிறை உள்ளது. பெண்களுக்கு கொழுப்பு அதிகம் உள்ளது. தசைகள் கொழுப்பை விட அதிக தண்ணீரை தான் தக்க வைத்துக் கொள்கின்றன. இதனால்தான் ஆண்களுக்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. மேலும் ஆண்கள் பெண்களை விட அதிக எடை கொண்டவர்கள் என்பதுதான் உண்மை. எனவேதான் ஆண்கள் பெண்களை விட அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

இதையும் படிங்க :   ஒவ்வொரு ஆண்களும் இந்த 5 விஷயங்களை  கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க.. ஹெல்தியா இருப்பீங்க!!

55
உடல் சுழற்சி:

உண்மையில், பெண்களுக்கும் ஆண்களுக்கும் உடலில் நடக்கும் சுழற்சி வேறுபட்டது. அதாவது, பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அளவுகள் அதிகரிக்கும் போது, பிளாஸ்மா அளவானது குறையத் தொடங்கும். இதன் காரணமாக பெண்கள் அதிக தாக்கத்தை உணர்வார்கள். ஆனால் ஆண்களுக்கு இந்த நிலை அல்ல. அவர்கள் தங்களது ஆரோக்கியத்தை நல்ல நிலையில் பராமரிக்க, நிறைய தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும். இதன் மூலம் அவர்களது உடலில் ரத்த ஓட்டம் சரியாக பராமரிக்கப்படுகிறது செரிமான திறன் மேம்படும் மற்றும் ரத்த சர்க்கரை அளவு சமநிலைப்படுத்தப்படுகிறது. அதுபோல சரியான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் இதே ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இதுவே ஆண்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால், நீரிழப்புக்கு வழிவகுக்கும். இதனால் உங்களது சக்தி உறிஞ்சப்பட்டு நீங்கள் சோர்வாக உணர்வீர்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories