ஆண்களே.. நீங்க இளமையாக இருக்க ஆசைப்படுறீங்களா? அப்ப முதல்ல 'இத' படிங்க..
Tips For Men To Look Younger : ஆண்கள் இளமையாக தோற்றமளிக்க சில பயனுள்ள குறிப்புகள் இங்கே..
Tips For Men To Look Younger
இந்த காலத்தில் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதற்காக அவர்கள் தங்களை பராமரித்துக் கொள்கிறார்கள். அந்த வகையில், வேலை சுமை மற்றும் மாசுபாட்டின் தாக்கத்தால் சிரமப்படும் ஆண்களுக்கான சில குறிப்புகள் இங்கே...
Tips For Men To Look Younger
நடைப்பயிற்சி: நீங்க நாள் முழுவதும் மாசுபாட்டால் அவதிப்படுகிறீர்கள் என்றால், தினமும் காலையில் நடைப்பயிற்சி செய்து, சுத்தமான காற்றை வாங்குங்கள். காலையில் சுமார் 15 நிமிடம் நடைப்பயிற்சி செய்தால் நாள் முழுவதும் உங்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும் . அதுபோல, நடக்கும்போது உங்களால் முடிந்தவரை ஆழமாக சுவாசிக்கவும். அந்த காற்றை நீங்கள் நீண்ட நேரம் வைத்து, பிறகு மூச்சை வெளிவிடவும். உங்களுக்குள் எவ்வளவு புதிய காற்றை நிரப்பிக்கிறீர்களோ, அவ்வளவு புத்துணர்ச்சியுடன் நாள் முழுவதும் இருப்பீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
Tips For Men To Look Younger
நிறைய தண்ணீர் குடியுங்கள்: நடைபயிற்சி செல்வதற்கு முன் பின் இரண்டு கிளாஸ் தண்ணீர் கண்டிப்பாக குடிக்கவும் தண்ணீர் உங்களுக்கு பளபளப்பான சருமத்தை கொடுக்கும். மேலும் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் நிறைய தண்ணீர் குடியுங்கள். அதுபோல நீங்கள் கோடைகாலத்தில் அலுவலகம் செல்லும்போது குளுக்கோஸை தண்ணீரில் கலந்து குடிக்கவும். அலுவலகத்தில் இருந்து வந்த பிறகும் அதே போல குளுக்கோஸை தண்ணீரில் கலந்து குடிக்கவும்.
Tips For Men To Look Younger
புகை பிடிக்காது: இளைஞர்களின் மிகப்பெரிய எதிரி புகைபிடிப்பது தான். பலர் வீட்டிற்கு தெரியாமல் ரகசியமாக புகைப்பிடிப்பார்கள். இல்லையெனில், குட்காவை பயன்படுத்துவார்கள். புகைபிடிப்பது உங்கள் இமேஜை கெடுப்பது மட்டுமல்ல, உங்கள் இளமையையும் தின்றுவிடும் என்பது கூட உங்களுக்கு தெரியாதா? எனவே நீங்கள் இளமையாகவும், அழகாகவும் இருக்க விரும்பினால் புகை பிடிப்பதை உடனே நிறுதான்ங்கள்.
Tips For Men To Look Younger
நல்ல தூக்கம் அவசியம்: ஆண்களுக்கு இந்த பழக்கம் மிகவும் அவசியம். ஏனெனில், ஆபீஸில்இருந்து வந்தவுடன் டிவி அல்லது மொபைல் போன் பார்ப்பதை பலர் வழக்கமாக்கி உள்ளனர். ஆனால் இப்படி செய்தால் தூக்கத்தின் நேரம் பாதிக்கப்படும். இதனால் உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படும். எனவே, சுமார் 8 மணி நேரம் நீங்கள் தூங்குவது மிகவும் அவசியம்.