Published : Feb 14, 2025, 10:19 AM ISTUpdated : Feb 14, 2025, 10:24 AM IST
Lifestyle Changes to Lower Bad Cholesterol : உங்களது அன்றாட வாழ்க்கையில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் உடலில் சேரும் கெட்ட கொழுப்பை சுலபமாக கரைத்து விடலாம்.
உடலில் கெட்ட கொழுப்பைக் குறைக்க இன்றிலிருந்து இந்த '7' விஷயங்களைச் செய்ங்க!
நம்முடைய உடலில் நல்ல மற்றும் கெட்ட கொழுப்பு இரண்டு வகைகள் உள்ளன. உடலில் நல்ல கொழுப்பு இருப்பது மிகவும் அவசியம். மேலும் இது இதயத்திற்கு ரொம்பவே அவசியம். அதே நேரத்தில் அதிக அளவு கெட்ட கொழுப்பு அதாவது, இது இதயத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். இன்னும் சொல்லப் போனால் உடலில் கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்க தொடங்கும் போது மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இது தவிர உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும்.
25
உடலில் கெட்டு கொழுப்பை குறைக்க
நிபுணர்களின் கூற்றுப்படி, இன்றைய காலகட்டத்தில் உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் ஒழுங்கற்ற வாழ்க்கை முறை, உணவில் ஊட்டச்சத்துக்கள் இல்லாதது மற்றும் குறைவான உடல் செயல்பாடுகள் ஆகியவைதான். ஆனால் நம்முடைய அன்றாட வாழ்வில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் உடலில் கெட்ட கொழுப்பு அளவு அதிகரிப்பதை சுலபமாக தடுத்துவிடலாம் மற்றும் நோய்களின் அபாயத்தையும் குறைத்து விடலாம். அது என்ன என்பதை பற்றி இங்கு காணலாம்.
35
உடலில் கெட்டு கொழுப்பை குறைக்க செய்ய வேண்டிய 7 விஷயங்கள்:
நெய் : பதப்படுத்தப்பட்ட தாவர எண்ணெய்கள் மற்றும் டிரான்ஸ் கொழுப்புகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். இது உடலில் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரித்து இதய நோய் அபாயத்தை ஏற்படுத்தும். ஆனால் அதற்கு பதிலாக நீங்கள் உங்களது உணவில் நெய் அல்லது குளிர்ந்த அழுத்தப்பட்ட எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். இது உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.
நார்ச்சத்து உணவுகள் : உங்களது உணவில் அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். காய்கறிகள், பழங்கள் ஓட்ஸ் மற்றும் முழு தானியங்கள் ஆகியவற்றில் நார்ச்சத்து நிறைந்துள்ளன. இவை உடலில் கெட்ட கொழுப்பு சேருவதை குறைக்கும்.
சாப்பிட்ட பிறகு ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தால் உடலில் சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவு அதிகரிக்கும். எனவே சாப்பிட்ட பிறகு குறைந்தது 15 நிமிடங்கள் கண்டிப்பாக நடக்க வேண்டும். இது உடலில் ரத்த சர்க்கரை அளவை சமன் செய்து கொழுப்பு சேருவதை குறைக்கிறது.
உண்ணாவிரதம் இருங்கள் : வாரத்திற்கு 1-2 முறை உண்ணா விரதம் இருங்கள். அதுவும் 12-14 மணி நேரம். இது கொழுப்பு வளர்ச்சியை மாற்றத்தையும், நல்ல கொழுப்பின் அளவையும் மேம்படுத்த உதவுகிறது.
உங்களிடம் புகைபிடிக்கும் பழக்கம் இருந்தால் உடனே அதை நிறுத்தி விடுங்கள். ஏனெனில் இந்த பழக்கம் நுரையீரலில் மோசமான விரைவில் ஏற்படுகின்றது. முக்கியமாக புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது. இது தவிர உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்.
நட்ஸ்கள் : உங்களது உணவில் ஊற வைத்த நட்ஸ்கள் மற்றும் விதைகள் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகளை சேர்த்துக் கொள்ளுங்கள். இவை உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரித்து, கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.