அடேங்கப்பா!! வெறும் 30 நாள்களில் '4' கிலோ வரை எடை குறையுமா? பெஸ்ட் வாக்கிங் டிப்ஸ்!! 

Published : Feb 14, 2025, 08:38 AM IST

Walking Plan For Weight Loss : தினமும் எவ்வளவு நேரம் நடந்தால் ஒரே மாதத்தில் 4 கிலோ வரை எடையை குறைக்கலாம் என இந்தப் பதிவில் காணலாம். 

PREV
16
அடேங்கப்பா!! வெறும் 30 நாள்களில் '4' கிலோ வரை எடை குறையுமா? பெஸ்ட் வாக்கிங் டிப்ஸ்!! 
அடேங்கப்பா!! வெறும் 30 நாள்களில் '4' கிலோ வரை எடை குறையுமா? பெஸ்ட் வாக்கிங் டிப்ஸ்!!

நம்முடைய ஆரோக்கியத்தை பராமரிக்க நாம் சில விஷயங்களை செய்ய வேண்டும். உடல் பருமன் பல நோய்களுக்கு இடமளிக்கக் கூடியது. அதனால் பலரும் எடை குறைப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட முடிவாகும். நோய்களை தடுப்பதற்கும், ஆரோக்கியமாக இருப்பதற்கும் தனிப்பட்ட நபர் ஆர்வம் காட்டினால்தான் அவர் அதற்கான முயற்சிகளை எடுப்பார். உங்களால் கடுமையான பயிற்சிகளை செய்ய முடியாதென்றால் நடைபயிற்சி கண்டிப்பாக செய்யலாம். இதில் உங்களுக்கு கணிசமான எடை குறைப்பு இருக்கும். நடைபயிற்சிக்கு என எந்த தனிப்பட்ட உபகரணங்களும் தேவையில்லை. இது ஒரு எளிமையான கார்டியோ பயிற்சியாகும். வெறும் நடைபயிற்சியினால் உங்களுடைய எடை குறைப்பில் நல்ல மாற்றங்களை காண முடியும்.  குறிப்பாக, ஒரே மாதத்தில் நான்கு கிலோ வரை எடை குறைக்க வேண்டுமென்றால்  நடைபயிற்சியில் சிறு மாற்றங்களை செய்ய வேண்டும். அது குறித்து இந்த பதிவில் காணலாம். 

26
ஒரே மாதத்தில் 4 கிலோ எடை குறைப்பு:

தினமும் நடைபயிற்சி செய்வதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் எடை குறைப்பிற்கு வெறும் நடைபயிற்சி மட்டும் போதாது. நீங்கள் ஆரோக்கியமான உடலுக்காக நடைபயிற்சி செய்தால் மிதமான வேகத்தில் நடக்கலாம். சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தத்தை குறைக்க என நோய்களை கட்டுக்குள் வைக்க நடந்தால் மெதுவாக வசதிக்கு ஏற்றார் போல் நடக்கலாம். ஆனால் எடையை குறைக்க நடக்கும் போது விறுவிறுப்பாக நடைபயிற்சி செய்ய வேண்டும்.  சுறுசுறுப்பாக நடந்தால் தான் எடை குறையும். அதிக எடையுள்ளவர்கள் சுறுசுறுப்பாக நடந்தால் அதிகமான எடை இழப்பு ஏற்படும். உடலுக்கு  ஏற்ப நடக்கும் வேகத்தை அதிகரிப்பது பலனளிக்கும். நடக்கும்போது கைகளை வீசியபடி செல்ல வேண்டும். சுமார் 30 முதல் 40 நிமிடங்கள் விறுவிறுப்பாக நடப்பது 150 கலோரிகள் வரை எடையை குறைக்க உதவும். 

36
எவ்வளவு காலடிகள்:

பத்தாயிரம் காலடிகள் நடப்பது உங்களுடைய எடை குறைப்புக்கு பக்கபலமாக இருக்கும். ஆனால் அனைவருமே அந்த இலக்கை எட்ட வேண்டும் என்ற கட்டாயமில்லை. படிப்படியாக காலடிகளை அதிகரிக்கலாம். நீங்கள் எட்டு வைக்கும் தூரம் பொறுத்து 10 ஆயிரம் அடிகள் என்பது மாறுபடும். நீங்கள் செய்ய வேண்டியது விறுவிறுப்பாக நடப்பது மட்டும் தான். 

46
உணவு பழக்கம்:

நீங்கள் எந்த பயிற்சியை மேற்கொண்டாலும் உங்களுடைய உணவுப் பழக்கம் சரியாக இருந்தால் மட்டுமே எடையை குறைக்க முடியும். எடையை குறைப்பதற்கு சில உணவுகளை தவிர்ப்பது நல்லது. நாள்தோறும் பொறித்த உணவுகளை சாப்பிடுபவராக இருந்தால் அதை தவிருங்கள். துரித உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். இனிப்பு பண்டங்கள் சாப்பிடுவதற்கு பதிலாக பழங்களை  சாப்பிடலாம். சாக்லேட் சாப்பிடத் தோன்றினால் வாழைப்பழம் சாப்பிடலாம். வேர்க்கடலை, விதைகள் போன்ற ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகளை எடுத்துக் கொள்ளலாம். தினமும் ஒரே நேரத்தில் சாப்பிடுவதை பழக்கப்படுத்த வேண்டும். பசிக்கும்போதெல்லாம் சாப்பிடும் பழக்கத்தை கைவிடுங்கள். சில நேரங்களில் தண்ணீர் குடிப்பதற்காக ஏற்படும் உணர்வை பசி என எண்ண வேண்டாம். 

இதையும் படிங்க:  வெறும் வாக்கிங்ல எடையை குறைக்கனுமா? நடக்குறப்ப இந்த '1' ட்ரிக் பண்ணா போதும்!!

56
எப்போது சாப்பிட வேண்டும்?

நீங்கள் காலை கண் விழித்த பின் 2 முதல் 2.5 மணி நேரத்திற்குள் சாப்பிடுவது நல்லது. காலை 6 மணிக்கு எழுந்தால் 8.35க்குள்ளாக காலை உணவை சாப்பிட வேண்டும். பின்னர் 4 மணி நேரம் இடைவெளிக்கு பின்  மதிய உணவை சாப்பிடுங்கள். தூங்க செல்வதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பாக சாப்பிட வேண்டும். குறைந்தபட்சம் 2 மணி நேரத்திற்கு முன்பு இரவு உணவை முடித்துக் கொள்ள  வேண்டும். இரவு உணவை எளிதில் செரிமானம் ஆகக்கூடிய எளிய உணவாக எடுத்துக் கொள்வது நல்லது. இரவில் சோறு போன்ற கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்க்க வேண்டும். 

இதையும் படிங்க:  நோய்களை நீக்கும் வெறுங்கால் வைத்தியம்.. பலர் அறியாத வாக்கிங் 'டிப்ஸ்'

 

66
குறிப்பு:

மேலே சொல்லப்பட்ட விஷயங்களை கவனமாக பின்பற்றினால் மற்ற உடற்பயிற்சிகள் அல்லாமல் வெறும் நடை பயிற்சியிலேயே உங்களால் ஒரே மாதத்தில் நான்கு கிலோ வரை எடை குறைக்கலாம். நீங்கள் செய்யும் உடற்பயிற்சி 20% மட்டுமே எடை இழப்பில் பங்குகொள்கிறது. மீதமுள்ள 80 சதவீதம் உங்களுடைய உணவுப் பழக்கத்தை சார்ந்தது. ஆகவே நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். அப்போது தான் எடையை குறைக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories