கொள்ளு குதிரைக்கான உணவு மட்டுமல்ல, உடலை இரும்பு போல் வலுவாக்கும் அற்புத மூலிகை. இது உடலுக்கு நல்லது என்றாலும், சிலர் இதைத் தவிர்க்க வேண்டும் என்ற விதியும் உண்டு. கொள்ளு யாருக்கெல்லாம் நல்லது, யாரெல்லாம் சாப்பிடக் கூடாது என்று தெரிந்துகொள்வது அவசியம்.
ஜிம்முக்கு போய் வெயிட் குறைக்க கஷ்டப்படுறீங்களா? கொள்ளு சூப் குடிங்க. இது உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பை மெழுகு போலக் கரைக்கும். மெட்டபாலிசத்தை எகிற வைக்கும்!
26
சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?
இரத்தத்தில் சர்க்கரை அளவு அடிக்கடி எகிறுகிறதா? கொள்ளு சாப்பிட்டால் இன்சுலின் சுரப்பு சீராகும். சர்க்கரை அளவு சட்டெனக் கட்டுப்பாட்டுக்குள் வரும்.
36
சளி, இருமலால் அவதியா?
நெஞ்சுச்சளி, விடாத இருமலுக்கு கொள்ளு ரசம் ஒரு அருமருந்து. உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுத்து, நுரையீரலைத் தூய்மையாக்கும்.
கொள்ளு இயற்கையிலேயே அசாத்தியமான வெப்பத் தன்மை கொண்டது. ஏற்கனவே 'உடல் சூடு' பிரச்சனை, மூலம் (Piles), அல்லது வாய்ப்புண்ணால் அவதிப்படுபவர்கள் கொள்ளு சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
56
கர்ப்பிணிப் பெண்கள் உஷார்!
கர்ப்ப காலத்தில் உடலில் இயல்பாகவே வெப்பம் அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் கொள்ளு சாப்பிடுவது கருச்சிதைவு அல்லது உடலுக்குள் தேவையற்ற உபாதைகளை ஏற்படுத்தலாம். எனவே, தவிர்ப்பது புத்திசாலித்தனம்.
66
சிறுநீரகக் கல் பிரச்சனையா?
கொள்ளில் கால்சியம் ஆக்சலேட் அதிகம் உள்ளது. சிறுநீரகக் கல் பிரச்சனைக்கு கொள்ளு நல்லது என்று சிலர் சொல்வார்கள். ஆனால், ஏற்கனவே கல் உருவாவதற்கான உடல்வாகு கொண்டவர்கள் இதை மருத்துவர் ஆலோசனையின்றி சாப்பிடக் கூடாது.