தீவிரமாக உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு இருந்தும் சிலருக்கு உடல் எடை குறையாது. இதற்கு வளர்சிதை மாற்றமே (Metabolism) காரணம். இந்த வளர்சிதை மாற்றத்தை இயற்கையாகவே தூண்டி, எடையை வேகமாகக் குறைக்க உதவும் ஓர் சிறந்த வழிதான் 'தெர்மோஜெனிக் உணவுகள்'
சில உணவுகளை ஜீரணிப்பதற்காக நமது உடல் வழக்கத்தை விட அதிக ஆற்றலையும் கலோரிகளையும் பயன்படுத்தும். இதனால் உடலின் வெப்பநிலை மற்றும் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்பு வேகமாக கரையும். இதையே 'தெர்மோஜெனிக் விளைவு' என்கிறோம். எளிமையாகச் சொன்னால், இவை உடலுக்குள் இயற்கையான ஃபேட் பர்னராக (Fat Burner) செயல்படுகின்றன.
26
கொழுப்பை எரிக்கும் புரதச்சத்து :
உடல் எடையைக் குறைக்க புரதச்சத்து மிகவும் அவசியம். முட்டை, கிரீக் தயிர் போன்ற புரோட்டீன் நிறைந்த உணவுகளைச் செரிமானம் செய்ய உடல் 20% முதல் 30% வரை கூடுதல் கலோரிகளை எரிக்கிறது. இது தசைகளை வலுவாக்கி, பசியையும் கட்டுப்படுத்துகிறது.
36
காரமான உணவுகளின் ரகசியம் :
மிளகாய் மற்றும் மிளகில் உள்ள 'கேப்சைசின்' (Capsaicin) என்ற பொருள் உடலின் வெப்பத்தை தற்காலிகமாக உயர்த்துகிறது. இந்த காரத்தன்மை மெட்டபாலிசத்தைத் தூண்டி, நாம் சாதாரணமாக இருக்கும்போது கூட கலோரிகளை எரிக்கச் செய்கிறது. எனவே, உணவில் மிளகுத்தூள் சேர்ப்பது நல்லது.
ஓட்ஸ், சியா விதைகள் போன்ற நார்ச்சத்து மிகுந்த உணவுகள் செரிமானத்தை சீராக்குகின்றன. அதேபோல், சர்க்கரை இல்லாத பிளாக் காபி மற்றும் கிரீன் டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலின் கொழுப்பு எரிப்புத் திறனை அதிகரித்து, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகின்றன.
56
ஸ்மார்ட் காலை உணவு காம்போ :
காலை உணவில் சில எளிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் எடையை வேகமாக குறைக்கலாம். உதாரணமாக:
வேகவைத்த முட்டையுடன் சிறிது மிளகாய்த்தூள் சேர்த்துச் சாப்பிடலாம்.
ஓட்ஸ் கஞ்சியுடன் முட்டையின் வெள்ளைக்கருவைச் சேர்த்து உட்கொள்ளலாம்.
இந்த காம்போக்கள் உடலின் ஆற்றலை அதிகரித்து, கொழுப்பை வேகமாக எரிக்கும்.
66
தயிர் மற்றும் இலவங்கப்பட்டை :
கிரீக் தயிருடன் ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை (Cinnamon) தூள், பாதாம் மற்றும் சியா விதைகளைச் சேர்த்துச் சாப்பிடுவது ஒரு சிறந்த தெர்மோஜெனிக் உணவாகும். இது இரத்த சர்க்கரையைக் கட்டுக்குள் வைப்பதுடன், உடலில் தேவையற்ற கொழுப்பு தங்குவதையும் தடுக்கிறது.