health tips: நாவல் பழம் - சுகர், BP இருக்கவங்க சாப்பிடலாமா? கூடாதா?

Published : Jun 16, 2026, 06:00 PM IST

ரோட்டோரமா நாவல் பழத்தை பார்த்த உடனே நாக்குல எச்சில் ஊறுதா? ஆனா "எனக்கு சுகர் இருக்கே, பிபி இருக்கே... சாப்பிடலாமா?" அப்படின்னு பயந்து தள்ளி நிக்கிறீங்களா? அப்படின்னா இந்த தகவல் உங்களுக்கு தான்.

PREV
15
சுகர் காரங்களுக்கு இது ‘வரப்பிரசாதம்’:

நாவல் பழத்தில் ‘ஜம்போலினின்’ (Jamboline) மற்றும் ‘ஜம்போசின்’ (Jambosine) என்னும் இரண்டு மேஜிக் கூட்டுப்பொருட்கள் இருக்கு. இது நீங்கள் சாப்பிடும் சாப்பாட்டில் இருக்கும் ஸ்டார்ச்சை (Starch) சர்க்கரையாக மாறவிடாமல் தடுக்குது. சோ, சுகர் லெவல் டக்குனு ஏறாது!

25
பிபி எகிறாமல் தடுக்கும் பொட்டாசியம்:

நாவல் பழத்தில் சோடியம் ரொம்ப கம்மி, ஆனால் பொட்டாசியம் (Potassium) அதிகம். இது உங்கள் இரத்த நாளங்களை ரிலாக்ஸ் பண்ணி, இரத்த அழுத்தத்தை (BP) சீராக வச்சுக்க உதவுது. இதயம் பத்திரமாக இருக்கும்!

35
பழத்தை விட பவர்ஃபுல் கொட்டை :

நாம் பழத்தை சாப்பிட்டுட்டு கொட்டையை தூக்கி போடுவோம். ஆனால் ஆயுர்வேதத்தில் நாவல் பழக் கொட்டையை காயவச்சு அரைச்சு பொடியாக குடிக்கிறாங்க. இது டைப்-2 சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்த ஒரு அருமையான இயற்கை மருந்து!

45
ஒரு நாளைக்கு இவ்வளவுதான் லிமிட்:

என்னதான் நல்லதுன்னாலும் ஒரு நாளைக்கு 10 முதல் 15 நாவல் பழங்களுக்கு மேல் சாப்பிடக் கூடாது. அதே போல், நாவல் பழத்தை வெறும் வயிற்றில் (Empty Stomach) சாப்பிடவே கூடாது. சாப்பிட்ட பிறகு ஸ்நாக்கா எடுத்துக்கலாம்!

55
இதை மட்டும் பண்ணிடாதீங்க:

நாவல் பழம் சாப்பிட்ட உடனே அல்லது சாப்பிடுறதுக்கு முன்னாடி பால் குடிக்கவே கூடாது. அப்படி குடிச்சா நெஞ்செரிச்சல், அசிடிட்டி, வயிறு உப்புசம்னு ஏகப்பட்ட சைடு எஃபெக்ட்ஸ் வரும்.

Read more Photos on
click me!

Recommended Stories