Gulkand : குல்கந்து நன்மைகளை வாரி வழங்கும்! ஆனா இந்த நபர்கள் சாப்பிட்டா உடம்புக்கு ஆகாது

Published : Nov 10, 2025, 12:02 PM IST

குல்கந்து பல அருகே நன்மைகளை வழங்கினாலும் சிலர் அதை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் இந்த பதிவில் யாரெல்லாம் குல்கந்து சாப்பிடக்கூடாது என்று பார்க்கலாம்.

PREV
17
Who Should Avoid Gulkand

பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட குல்கந்து நம்முடைய ஆரோக்கியத்திற்கு ஏராளமான நன்மைகளை வாரி வழங்கும். சர்க்கரை மற்றும் ரோஜா இதழ்கள் கொண்டு தயாரிக்கப்படும் இது குளிர்ச்சியான தன்மையை கொண்டுள்ளது. இதை சாப்பிடுவதன் மூலம் வயிற்று எரிச்சல் தணியும், வாய்ப்புண் குணமாகும் மற்றும் செரிமானம் மேம்படும் என்று சொல்லப்படுகின்றது. இது தவிர சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உள்ளிட்ட பல ஆரோக்கிய நன்மைகளை இது நமக்கு வழங்குகின்றது. எனினும் சில உடல்நிலை பிரச்சினை உள்ளவர்கள் குல்கந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அவர்கள் யாரெல்லாம் என்று இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.

27
செரிமான பிரச்சனை :

வாயு, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனை உள்ளவர்கள் குல்கந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லை எனில் இது பிரச்சனையை மேலும் மோசமாகும்.

37
சர்க்கரை நோயாளிகள் :

குல்கந்தில் அதிக அளவு சர்க்கரை சேர்க்கப்படுவதால் சர்க்கரை நோயாளிகள் இதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் உடலில் இரத்த சர்க்கரை அளவு வேகமாக அதிகரித்து விடும்.

47
அதிக உடல் பருமன் :

ரோஜா இதழ்கள் மற்றும் சர்க்கரை கொண்டு தயாரிக்கப்படும் குல்கந்தில், கலோரிகள் அதிகமாக இருக்கும். எனவே இதை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடலில் கொழுப்பை அதிகரித்து எடையை அதிகரிக்கச் செய்யும். எடை அதிகமானால் உடல் ஆரோக்கியமானது பல வழிகளில் பாதிக்கப்படும். ஆகவே உடல் பருமன் பிரச்சினை உள்ளவர்கள் குல்கந்து சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

57
சளி மற்றும் இருமல் உள்ளவர்கள் :

குல்கந்து குளிர்ச்சியான தன்மையை கொண்டுள்ளதால் சளி, இருமல் பிரச்சனை உள்ளவர்கள் இதை சாப்பிடுவது தவிர்க்க வேண்டும். இல்லையெனில் சளி, இருமலை மேலும் மோசமாகிவிடும்.

67
அலர்ஜி உள்ளவர்கள் :

சிலருக்கு பூக்களுக்கு ஒவ்வாமை இருக்கும். எனவே அத்தகையவர் குல்கந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மீறி சாப்பிட்டால் சருமத்தில் அரிப்பு, தடிப்புகள், எரிச்சல் உள்ளிட்ட பல சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

77
பல் சொத்தை :

உங்களுக்கு பல் சொத்தை அல்லது வேறு ஏதேனும் வாய் சுகாதார பிரச்சனையிருந்தால் குல்கந்து சாப்பிட வேண்டாம். ஏனெனில், காரணம் குல்கந்தில் சர்க்கரை அதிகமாக இருப்பதால் இது வாய்வழி சுகாதார பிரச்சனையை மேலும் பாதிக்கும்.

மேலே குறிப்பிட்டுள்ளவர்களை தவிர மற்றவர்களும் குல்கந்தை அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அது போல மருத்துவரை அணுகி பிறகு சாப்பிடுவது நல்லது.

Read more Photos on
click me!

Recommended Stories