நன்மைகளை வாரி வழங்கும் வால்நட் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
life-style Aug 27 2025
Author: Kalai Selvi Image Credits:Getty
Tamil
ஊட்டச்சத்துக்கள்
வால்நட்டில் கார்போஹைட்ரேட், புரதம், மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், செலினியம், மாங்கனீசு, வைட்டமின் பி, வைட்டமின் ஈ மற்றும் நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளன.
Image credits: pinterest
Tamil
சிறுநீரக கல் பிரச்சனை
சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் வால்நட் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இதில் இருக்கும் அதிகப்படியான ஆக்சலேட் சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.
Image credits: Getty
Tamil
செரிமான பிரச்சனை
செரிமான பிரச்சனை உள்ளவர்கள் வால்நட் சாப்பிட்டால், அதில் இருக்கும் அதிகளவு நார்ச்சத்து வாயு, வீக்கம், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்ற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.
Image credits: Getty
Tamil
யூரிக் அமில பிரச்சனை
வால்நட்டில் புரதம் ப்யூரியின் அதிகமாக உள்ளதால் யூரிக் அமில பிரச்சனை உள்ளவர்கள் அதை சாப்பிட்டால் மூட்டு வலி பிரச்சனை மேலும் அதிகரிக்கும்.
Image credits: Getty
Tamil
எடையை குறைக்க முயற்சிப்பவர்கள்
வால்நட்டில் அதிக அளவு கலோரிகள் உள்ளதால் இவற்றை சாப்பிட்டால் எடை இழப்பு முயற்சி பாதிக்கப்படும்.
Image credits: Social Media
Tamil
ஒவ்வாமை பிரச்சனை
வால்நட் சிலருக்கு அரிப்பு, வீக்கம், சுவாசிப்பதில் சிரமம் போன்ற ஒவ்வாமை பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். எனவே அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.