டீயில் காஃபின் உள்ளதால் அதிகமாக குடிக்கும் போது தலைவலி, தூக்கமின்மை, படபடப்பு, பதற்றம், சோர்வு, இதயத்துடிப்பு அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
Image credits: Freepik
Tamil
இரத்த சோகை
டீயில் உள்ள டானின் என்ற பண்பு உணவில் உள்ள இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதை தடுக்கும். இது நாளடைவில் இரும்புசத்து குறைபாடு அல்லது இரத்த சோகைக்கு வழிவகுக்கும்.
Image credits: Asianet News
Tamil
பற்களில் கறை
டீயில் இருக்கும் டானின்கள் பற்களில் கறையை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், பற்களின் எனாமலையும் அரிக்கும்.
Image credits: Getty
Tamil
இரத்த அழுத்தம்
அதிக அளவு டீ குடித்தால் இரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளன. ஏற்கனவே இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதிகமாக டீ குடிப்பதை தவிர்க்கவும்.
Image credits: Getty
Tamil
செரிமான பிரச்சினைகள்
டீயை அதிகமாக குடித்தால் அஜீரணம், நெஞ்செரிச்சல் போன்ற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும்.
Image credits: Getty
Tamil
கர்ப்பிணி பெண்கள்
கர்ப்பிணி பெண்கள் அதிகமாக டீ குடித்தால் கருச்சிதைவு அல்லது குறைவான எடையில் குழந்தை பிறப்பது போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
Image credits: adobe stock
Tamil
குறிப்பு
டீயை அதிகமாக அல்லாமல், மிதமாக குடிப்பது நல்லது. உங்களுக்கு ஏதேனும் உடல்நிலை பிரச்சினைகள் இருந்தால் மருத்துவரை அணுகிய பிறகு தான் டீ குடிக்கவும்.