தினமும் ஒரு கிராம்பை உண்டு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா ?

Published : Jan 24, 2025, 09:01 AM IST

கிராம்பு என்றாலே பிரியாணி, சிக்கன் கிரேவியில் சேர்க்கப்படும் வேண்டாத பொருள் என்று தான் நினைக்கத் தோன்றும். நமக்கு பிடித்த உணவுகளில் சேர்க்கப்படும் இந்த கிராம்பை அப்படியே தேடிப்பிடித்து தூக்கி வீசுவது நமது வழக்கம். ஆனால் நாம் தூக்கி போடும் இந்த கிராம்பில் நம் உடல் ஆரோக்கியத்தை செறிவூட்டும் பல ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன.

PREV
16
தினமும் ஒரு கிராம்பை உண்டு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா ?
Daily one Clove

நல்ல அற்புதமான வாசமும், அதே சமயம் இனிப்பு போன்ற ஒரு சுவையுடன் இருக்கும் இந்த கிராம்பை தப்பித்தவறி மென்று விட்டோமெனில் வாயில் ஒரு புத்துணர்ச்சியை உணர முடியும். ஆனால் தினமும் ஒரு கிராம்பை எடுத்து வந்தால் உடலுக்கு கிடைக்கும் 5 நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
 

26
Cloves for Oxygen

கிராம்பில் ஃப்ளேவனோய்ட்ஸ், ஃபினோலிக் காம்போண்ட்ஸ், யூகனோல் என்று முக்கிய ஆக்சிஜனேற்றிகள் இருக்கின்றது. இவை திசுக்களில் ஏற்படும் வீக்கம், அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி மிகவும் ஆபத்தான் நோய்களாக பார்க்கப்படுகின்ற புற்று நோய், இருதய நோய்கள், நரம்பியல் சார்ந்த நோய்களையும் தினமும் ஒரு கிராம்பை மெல்வதன் மூலம் அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம்.

36
Clove antioxidant

கிராம்பில் இருக்கும் முக்கியமான ஆக்சிஜனேற்றியான யூகனோல் ஒரு சிறந்த கிருமி நாசினி. எனவே உடலில் வரும் பாக்டீரியா, மற்றும் பூஞ்சை நோய்களுக்கு எதிராய் செயலாற்ற உதவுகிறது. அதுமட்டுமின்றி உடலில் வெள்ளை திசுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கவும் உதவுகிறது.

46
Cloves for Teeth

கிராம்பு பல்லுக்கு புத்துணர்ச்சியை கொடுப்பதுடன் வாயின் ஆரோக்கியத்திற்கும் பேருதவி செய்கிறது. இதனாலேயே கிராம்பு டீத் பேஸ்ட்டுகளில் சேர்க்கப்படும் முக்கிய பொருளாக பார்க்கப்படுகிறது. இதனால் கிராம்பை தினமும் மெல்வதன் மூலம் , வாயில் ஒளிந்திருக்கும் பாக்டீரியாக்களும் அழிந்துவிடுகிறது.
 

56
Cloves for Liver

உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவதில் பெரும் பங்காற்றும் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் பெரும் பங்காற்றுகிறது கிராம்பு. அதேபோல கிராம்பில் யூகனோலுடன் தைமோல் என்னும் ஆக்சிஜனேற்றியும் இருக்கிறது. இதனால் கல்லீரலில் புது திசுக்கள் உருவாவதற்கு பெரும் உதவி செய்வதுடன், கல்லீரலில் சேரும் நச்சை வெளியேற்றவும் உதவி, உடல் ஆரோக்கியத்தை மெருகேற்றுகிறது.
 

66
Cloves for Sugar patient

ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்வதில் இன்சுலின் ஹார்மோன் முக்கிய பங்காற்றுகிறது. எனில், டைப் 2 சர்க்கரை நோயுடன் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் க்ளூக்கோஸ், லிப்பிட்ஸ் மற்றும் கொலஸ்ட்ரோலின் அளவை சீராக வைத்துக் கொள்ள கிராம்பு உதவுகிறது. மாதம் ஒன்று முதல் மூன்று கிராம் அளவுக்கு  கிராம்பு எடுத்து வருவதன் மூலம் இவற்றை சீர் நிலையில் வைத்து கொள்ளலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories