வைட்டமின் டி குறைபாட்டை தடுக்கும் வழிகள்
கர்ப்ப காலத்தில் பெண்கள், போதுமான அளவு சூரிய ஒளியைப் பெற வேண்டும். சூரிய ஒளிக்கு உடலை வெளிப்படுத்துவதே, வைட்டமின் டி-யைப் பெறுவதற்கு மிகச் சிறந்த வழியாகும்.
வைட்டமின் டி அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். அதாவது கொழுப்பு மீன், முட்டையின் மஞ்சள் கரு, பால் மற்றும் தானியங்கள் போன்ற வலுவூட்டப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டும். கர்ப்பிணி பெண்கள் இந்த உணவுகளை, தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு சூரிய ஒளி அல்லது உணவில் இருந்து தேவையான அளவு வைட்டமின் டி கிடைக்கவில்லை எனில், அவர்கள் மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸை உட்கொள்ளலாம்.