உடலுறவில் உச்சநிலையை அடைவது உடலுக்கு நன்மை அளிக்கும். காதல் இன்பத்தைப் பெற பலர் சிற்றின்பத்தை நாடுகின்றனர். உடலுறவு உங்கள் உறவை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், உணர்ச்சி மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இப்போது தினசரி உடலுறவு கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளைக் காண்போம்.
Image: Getty Images
தூக்கம் மேம்படும்
உடலுறவில் ஏற்படும் உற்சாகம் உடலில் ஆக்ஸிடாஸின் என்ற ஹார்மோனை வெளியிட உதவுகிறது. இந்த ஹார்மோன் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆக்ஸிடாஸின் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாகவும், நிம்மதியாகவும் வைத்திருக்கிறது. இது தூக்க ஹார்மோனான மெலடோனின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது உங்களுக்கு நிம்மதியாக தூங்க உதவும்.
மன அழுத்தம் குறையும்
உடலுறவுக்கு பின் உங்கள் உடல் ஓய்வெடுக்கிறது. இது உங்கள் அழுத்தத்தை குறைக்கும். உங்கள் எண்ணங்களை மன அழுத்தத்திலிருந்து மகிழ்ச்சிக்கு அழைத்துச் செல்கிறது. அப்போது மகிழ்ச்சி ஹார்மோனாகிய டோபமைன் வெளியிடுகிறது. அது உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். செக்ஸ் மீதான ஆர்வத்தையும் அதிகரிக்கிறது.
Image: Getty Images
புரோஸ்டேட் புற்றுநோய் அபாயம் குறையும்
வழக்கமான உடலுறவு வைப்பது அடிக்கடி விந்துவை வெளியேற்றும். இதனால் ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனாலும் அடிக்கடி விந்து வெளியேறுவதால் புரோஸ்டேட் புற்றுநோயை எவ்வாறு பாதுகாக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. விந்து வெளியேறுதல், உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. அடிக்கடி விந்து வெளியேறும் ஆண்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.